“ஆசிரியர் பணிக்கு அறிவார்ந்தவர்கள் தேவை. இப்போது உள்ள ஆசிரியர் சமுதாயம் தேவையான அளவுக்கு கல்வி அறிவு பெற் றிருக்க வில்லை. கற்றலின் தரத்தை உயர்த்த கற்பித்தல் தரத்தை உயர்த்த வேண்டும். நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும்’’ என்றெல்லாம் நல்லாத்தான் பேசி யிருக்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல். ஆனால் அவர் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக பரிந்துரைப்பது தனியார்மயத்தை தான். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தனி யார் பொறியியல் கல்லூரிகள், நிகர் நிலைப் பல் கலைக் கழகங்கள், தனியார் பள்ளிகள் என நாள்தோறும் புற்றீசல் போல் முளைத்து வரு கின்றன.
அனைத்து தனியார் கல்விநிறுவனங் களுக்கும் மாநில அரசுகளும் மத்திய அரசும் தாராளமாக அனுமதி அளித்துவருகின்றன. இத னால் காசு உள்ளவர்களுக்கே கல்வி என்ற நிலை வந்துவிட்டது. மறுபுறம் நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரி யர்கள் பற்றாக்குறை, ஆய்வகம் இல்லை. உட் கார இருக்கைகள் இல்லை என்ற நிலை உள் ளது. இருப்பினும் இந்த பள்ளிகளை நம்பியுள்ள குழந்தைகள், குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி நன்றாக படித்து பொதுத் தேர்வு களில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுகிறார்கள். இவர் களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத் தால் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் திட்டங்களும் நோக்கங்களும் அரசுப் பள்ளி களை இழுத்து மூடும்வகையில் உள்ளன.கல்வித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கபில் சிபல், தனியார் கல்வி நிறு வனங்களின் பிரதிநிதியாகவே செயல் படுகிறார். உயர் கல்வித்துறையில் தனியார் கல்வி நிறுவ னங்கள் ஏராளமாக துவங்கப்பட்டுள்ளன. இருப் பினும் இது போதாது என்று கூறி, வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியா வுக்குள் கால் ஊன்ற அனைத்து ஏற்பாடுகளை யும் பின்புற வாசல் வழியாக அவர் செய்து கொண்டிருக் கிறார்.
ஏற்கெனவே இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை சந்தித் துள்ள நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழ கங்களுக்கு அனுமதி அளிக்க ஏதாவது விதி முறைகளை திருத்தமுடியுமா என்று ஆய்வு செய் யுமாறு பல்கலைக்கழக மானியக்குழுவை அவர் நிர்பந்தப்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் தான் தில்லியில் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் 1600 மாணவர்கள் படித்து வரும் ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியர் களே இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அம் பலப்படுத்தியிருக்கிறார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் -மாணவர் விகிதம் மிக மோசமாக இருப்பதாகவும், மதிய உணவுத் திட்டம் உட்பட பிரபலமான திட்டங்கள் சரிவர செயல்படுத்தப் படவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.நாட்டின் மனிதவளத்தை உருவாக்கும் கல் வித்துறையே இப்படி வலுவிழந்து கிடக்கும் நிலையில் இந்திய பொருளாதாரம் எப்படி வளர்ச்சி பெறும். இதற்கெல்லாம் மத்திய ஆட்சி யாளர்களிடம் விடை கேட்டால் புள்ளி விவரங் களை மட்டும் அள்ளி வீசி விடுவார்கள். அவர் களுக்கு இதை விட்டால் வேறு என்ன தெரியும்.

Leave A Reply

%d bloggers like this: