சேலம், ஜூன் 7-தமிழ்நாட்டில் 12 ஆயிரம் நீர்நிலைகள் மாயமாகி விட்டதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் கோவை, திருப்பூர், உடுமலை, பவானி, ஈரோடு, பள்ளிப்பாளையம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்று சூழல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் கோட்டையில் உள்ள முஸ்லிம் எஜூகேசனல் அசோசியேன் அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் புவி வெப்பம் அடைவது குறித்தும், அதை தடுக்க மரங்கள் அதிக அளவில் நடப்படுவது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகரமயமாக்கல், தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் மோசமாக மாசடைந்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை ஓடைகள், குளங்கள், குட்டைகள் என 12 ஆயிரம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டள்ளன. அவை இருந்த இடமே தெரியாத அளவுக்குமறைந்து மாயமாகி விட்டன. தண்ணீர் மாசு படுத்தப்படுவதால் பல வகையான நோய் தாக்குதல்அதிகரித்துள்ளன. நீர் நிலைகளை பாதுகாக்க அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. இதில் கேர் அமைப்பின் தலைவர் பிரிதிவிராஜ், டாக்டர் சூடாமணி, எழுத்தாளர் வினசென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: