‘தமிழகத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சிக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவ தால் நிறைய காலியிடங்கள் இருக்கின் றனவாம்! இதனால், தகுதி பெற்ற தொழில் நுட்ப மாணவ – மாணவியரை அதிகமாக உருவாக்க முடியவில்லையாம்! எனவே, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் 33 கோடி ரூபாய் அரசுப் பணத்தை அள்ளிக் கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டுள் ளதாம்’.கடந்த 14.5.2012 அன்று சட்டப் பேர வையில், விதி எண். 110ன் கீழ் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழக அரசில் இப்படி ஒரு துறை இருப்பதே மக்களில் பெரும் பாலானோ ருக்குத் தெரியாது.‘10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படித்து முடித்த பின்னர், கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடியாமலும், நேரடியாக வேலைக் குச் செல்ல முடியாமலும் துயரப்படும் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு, இலவசமாகத் தொழிற் பயிற்சி அளித்து, தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் திறன்மிக்க தொழிலா ளிகளாக அவர்களை வடிவமைக்கும் பணிகளை மேற்கொள்வதுதான் ‘அர சினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்’.
இவை, தமிழக அரசின் ‘வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்’ கீழ் செயல் பட்டு வருகின்றன.இந்திய நாடு முழுவதும் இப்படிப் பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் சுமார் 2000 உள்ளன. தமிழ்நாட்டில் 62 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ‘கை வினைஞர் பயிற்சித் திட் டம்’ என்ற பெயரில், மாநில அரசு நிர்வாகத் தில் நடைபெறும் மத்திய அரசின் திட்டம் ஆகும் இது. இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவில் பெரும்பகுதியை மத்திய அரசும், மீதியை மாநில அரசும் ஒவ் வொரு ஆண்டும் பரிசீலித்துப் பகிர்ந்து கொள்கின்றன.நீண்டகாலமாக, ஆங்காங்கே சில தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசின் அங்கீ காரத்தைப் பெற்று, ஒரு சில தொழிற் பயிற்சி நிலையங்களை சேவை மனப் பான்மையுடன் சட்ட விதிகளை மதித்து நடத்தி வந்தன.இந்தியாவில் புதிய பொருளா தாரக் கொள்கை நடைமுறைப்படுத் தப்பட்டது முதல், ‘கல்வி வியாபாரம்’ பல்கிப் பெருகி யதைப் போல், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் புற்றீசல்கள்போல் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் தற் போது 627 தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்கள் உள்ளன.தனியார் தொழிற்பயிற்சி நிலையங் களின் எண்ணிக்கை பெருகப் பெருக, இந்தத்துறையில் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) உள்ள உயர் அதிகாரி களின் கவனம், முழுக்க முழுக்க தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின்பால் திரும்பத் தொடங்கியது.ஏனெனில், ‘தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான மத்திய அரசின் அங் கீகாரத்தைப் பெற்றுத் தருவது; அவ்வப் போது ஆய்வுகளை மேற்கொள்வது; இறுதித் தேர்வுகளில் (அகில இந்தியத் தொழிற்தேர்வு) தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்களை அனுமதிப்பது’ போன்ற அதிகாரங்கள் தங்களிடம் உள்ளதால், பலனளிக்கும் பணியாக, தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களுக்கான பணியே தலை யாய பணி என துறையின் உயர் அதி காரிகள் தடம் மாறி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களின் பயிற்சி நலனை முற்றிலும் கை விட்டுவிட்டனர்.இந்தப் பின்னணியில்தான், தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதலாளிகளுக்கு அரசுப்பணம் 33 கோடி ரூபாயை அள்ளித் தர தமிழக அரசு இப்போது முடிவெடுத் துள்ளது.‘அரசு ஒதுக்கீட்டில் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒவ் வொருவருக்கும், கிராமப் பகுதிகளில் ரூ.10,000/- நகர்ப்பகுதியில் ரூ.12,000/-வீதம், ஆண்டுதோறும் 33 கோடி ரூபாயை, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குக் கொடுப்பதென’கடந்த 14.5.2012 அன்று தமிழக முதல் வர் சட்டமன்றத்தில் அறிவித் துள்ளார்.
இதற்காக அவர் கூறியுள்ள கார ணங்கள் :‘தகுதி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி அளிக்க முடியவில்லை. தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் மூலம் கூடுதல் எண்ணிக்கையில் பயிற்சி அளிக்க முடி யும். ஆனால், ஏழை மாணவர்கள் கட்ட ணம் செலுத்திப் பயிற்சி பெற இயலாமல் உள்ளதால், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த 50சத வீத காலியிடங்களில் அனுமதிக்கப்படும் மாணவ, மாணவியரின் பயிற்சிக் கட் டணத்தை அரசே செலுத்தும்’.
தமிழக முதல்வர் கூறும் காரணங்கள் சரியானதுதானா?* தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் காலியிடங்கள் இருப்பதைக் கண்டு கவலைப்படும் தமிழக அரசு, அர சினர் தொழிற்பயிற்சி நிலையங் களில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீத இடங் கள் சமீப காலங்களில், ஒவ்வொரு ஆண் டும் காலியாக இருப் பதைக் கண்டு கொள் ளாதது ஏன்?* 62 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு, பயிற்சியின் மேம் பாட்டுக்காக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கூட ஒதுக்காத தமிழக அரசு, தனி யார் தொழிற்பயிற்சி நிலைய முதலாளி களுக்கு ஆண்டுக்கு 33 கோடி ரூபாயை வாரி வழங்கிட முன் வந்தது ஏன்?* இந்த 33 கோடி ரூபாய் செலவில், வருடத்திற்கு 5 சிறிய அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடங்கி, கூடுதல் மாணவ – மாணவி யருக்குப் பயிற்சி அளித்திருக்கலாமே! இதனைப் பற்றி தமிழக அரசு சிந்திக் காதது ஏன்?* இந்த 33 கோடி ரூபாயை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஒதுக் கியிருந்தால், தொழிற் பயிற்சியின் தரத்தை, இன்றையத் தொழில்நுட்பத் தேவைக்கேற்ற வகை யில் உயர்த்தி இருக்க முடியுமே! துறை யின் அதிகாரி கள், இதனைப் பற்றி அரசுக்கு எடுத்து ரைக்காதது ஏன்?தமிழக முதல்வர் கவலைப்படும் அள வுக்குத் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் காலியிடங்கள் ஏற்படுவதற் கான உண்மையான காரணங்கள் என்ன தெரியுமா?1. அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் அளிக்கப்படுவதுபோல், தனி யார் தொழிற் பயிற்சி நிலையங் களில் இல வசப் பயிற்சி இல்லை.
மாறாக, கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற வேண்டியுள்ளது 2. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களில் உள்ளதைப் போல, மத்திய அரசு வரையறுத்துள்ள வெளி, உள் கட்டமைப்பு வசதிகள், இயந்திரங்கள், கருவிகள், தகுதி யுள்ள ஆசிரியர்கள், ஆசிரியர்களின் எண் ணிக்கை ஆகியவை எவையும் 95 சத வீதத் தனியார் தொழிற் பயிற்சி நிலையங் களில் இல்லை. (இவையெல்லாம் இல் லாமலேயே 95 சதவீதத் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள், இந்த அதிகாரி களின் மூலமாக, மத்திய அர சின் அங்கீ காரத்தை எப்படிப் பெற் றார்கள் என்பது தனிக்கதை) இந்தக் காரணங்களால்தான் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி யிடங்கள் உள்ளன.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள் ஏற்பட்டு வருவது ஏன்?அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களில் கடந்த சில ஆண்டுகளாகக் காலி யிடங்கள் ஏற்பட்டு வருவதே, துறையின் உயர் அதிகாரிகளின் பயிற்சிநலன் பற்றிய ஆளுமையின்மை தான்.“பல்வேறு தொழிற் பிரிவுகளில் சுமார் 153 அலகுகளை இழுத்துமூடி, (நவீனத் தொழில்நுட்பப் பயிற்சிக்காக, மத்திய அரசு அறிமுகப்படுத்திய) ‘திறன்மிகு பயிற்சி மையம்’ என்ற திட்டத்தைத் (எவ்வாறு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது என்ற விவரங்கள் தெரியாமல்) தொடங்கி யதால் தான், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த சில ஆண்டுக ளாகக் காலியிடங்கள் ஏற்பட்டு வரு கின்றன”.இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திப் பதற்கு நேரமில்லாத துறையின் இயக்கு நருக்கும், பயிற்சித் திட்டத்திற்கு முழுப் பொறுப்பான ‘இணை இயக்குநர் (கை வினைப் பயிற்சி)க்கும்’ தனியார் தொழிற் பயிற்சி நிலைய முதலாளிகளின் நலன் களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே நேரம் கிடைத்திருக்கிறது.எனவே, தமிழக முதல்வர் அறி வித் துள்ள காரணங்கள் எதுவும் சரி யில்லை. அரசு நடத்திவரும் தொழிற் பயிற்சி நிலை யங்களை எதிர்காலத்தில் தனியார் மய மாக்குவதற்கான முன்னறி விப்பு இது என் பதே உண்மை!
சிரிப்பதா? அழுவதா?ஒரு செய்தியைக் கேளுங்கள்!* தமிழக அரசின் 2012 -13 வரவு செல வுத்திட்ட, ‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித்துறைக்கான கொள்கைக் குறிப்பில் (ஞடிடiஉல சூடிவந)’ அகில இந்திய அளவில் இதுவரை நடை பெற்ற 47 ‘அகில இந்திய தொழில் திறன் போட்டி’களில் (ஹடட ஐனேயை ளுமடைட உடிஅயீநவவைiடிளே) 22 முறை தமிழ்நாடு ‘சிறந்த மாநிலமாக’த் தேர்வு பெற்றிருக் கிறது”என்று பெருமையோடு தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது! இவ்வாறு 22 முறை சிறந்த மாநிலமாகத் தமிழகம் தேர்வு பெற்ற தற்கு, அரசினர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களின் திறமை தான் காரணம் என்பது தமிழக அரசு அறி யாததா? இந்த மாணவர்களைப் பயிற்று வித்தது யார்? எவரால் இந்தப் பெருமை தமிழக அரசுக்குக் கிடைத்தது?“1960களில் வாங்கிய பழமையான இயந்திரங்கள்; தட்ப வெப்ப நிலைகளி லிருந்து பாதுகாப்பதற்கான சாதனங்களை வாங்கித் தராததால் துருப்பிடித்துவரும் சமீப காலங்களில் வாங்கிய விலை மதிப் புள்ள ‘நவீன கணினி இணைப்பு இயந்தி ரங்கள், ஆயிரக்கணக்கான மாணவர்க ளால் பல்லாண்டுக்காலம் பயன்படுத்தப் பட்டுத் தேய்ந்துபோன – உடைந்துபோன கருவிகள், சாதனங்களை மாற்றித் தராத நிலை; தொழில்நுட்ப ஊழியர் காலியிடங் களை நிரப்பாமல், ஒரு ஊழியர் 4/5 அலகு களின் (ருnவைள) மாண வர்களுக்குப் பயிற்சி அளித்து வருவது போன்ற பல்வேறு சிர மங்களிடையே”, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் தொழில் நுட்ப ஊழியர்களின் திறமையான பணி களாலும், பயிற்சி நலனில் அக்கறை யோடு பணியாற்றிவரும் நேர்மையான ஒருசில அதிகாரி களாலும்தான், தமிழக அரசு தனது கொள்கைக் குறிப்பில் மேற் கூறியவாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்தது என்பதை எவரால் மறுக்க முடியும்?
எனவே, வெறும் லாப நோக்கத்திற் காக மட்டுமே தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வரு கின்ற முத லாளிகளுக்கு அரசு நிதியை வழங்கும் தற் போதைய அறிவிப்பை தமிழக அரசு உட னடியாக ரத்துச் செய்யவேண்டும்.அரசினர் தொழிற்பயிற்சி நிலையங் களின் பயிற்சித்தரத்தை மேம்படுத்து வதற்காகவும், புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை கிராமப் பகுதிகள் முழுவதும் தொடங்குவதற்காகவும், தமி ழக அரசு அதிக நிதி ஒதுக்கவேண்டும்.மாணவ-மாணவியருக்கு முறை யான தொழிற்பயிற்சி தொடர்ந்து கிடைத்திட வும், அரசினர் தொழிற் பயிற்சி நிலையங் கள் தனியாருக்குத் தாரைவார்க்கப் பட்டுவிடாமல் பாது காத்திடவும், இந்தத் துறையின் தொழில்நுட்ப ஊழியர்களும், தற்போது அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் பயிற்சி பெற்றுவரும் மாணவ, மாணவியரும், இன்னபிற மாணவர் அமைப்புகளும் விழிப்போடு இணைந்து போராட வேண்டும்.கட்டுரையாளர்முன்னாள் பொதுச்செயலாளர்தமிழ்நாடு தொழிற்பயிற்சிஅலுவலர் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.