மதுரை, ஜூன் 7
-தனியாரிடம் வாங்கும் மின் மீட்டர்களுக்கு தமிழ் நாடு மின்சார வாரியம் எந்தவகையிலும் பொறுப் பேற்காகது என அதிகாரி கள் கூறிய பதிலால் பொது மக்கள் அதிர்ச்சியடைந் தனர்.புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு அரசாங்கத்திடம் மின் மீட்டர் இல்லை என்ற பதிலை மின்வாரியம் கடந்த 5 மாதங்களாக கூறிவந்தது. இந்நிலையில் தனியாரிடம் மின் மீட்டர் வாங்கி வந்தால் தங்களுக்கு ஆட்சேபணை யில்லை என மின்வாரியம் கூறியது. இதையடுத்து மின் மீட்டர் கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும் விவரத்தை மின்வாரிய அதிகாரி கள் பத்திரிகைகள் மூலம் வெளி யிட்டனர். இதையடுத்து புதிதாக மின் இணைப்பு கேட்டவர்கள் ரூ.1250 கொடுத்து மின் மீட்டர் களை வாங்கினர்.மின்மீட்டர்களை மின் வாரிய அலுவலகத்திற்கு கொண்டுசென்ற பொது மக்களுக்கு அதிகாரி ஒருவர் கூறிய தகவலால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தனியாரிடம் வாங்கும் மின் மீட்டருக்கும் மின் வாரியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மின் மீட்டரில் எந்தப் பிரச் சனை ஏற்பட்டாலும் அதை நுகர் வோர்களே தங்களது சொந்தச் செலவில் சரி செய்து தர வேண்டும். அது வும் ஒரு வார காலத்தில் மின் மீட்டரை சரிசெய்து தரவில்லையெனில் மின் சாரம் துண் டிக்கப்படும் என்றார்.மேலும், தமிழக அரசு மீட்டர்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3லட்சம் மீட் டர்கள் வந்துவிடும். அதிக பட்சம் 10 நாட்களுக்குள் வந்துவிடும் என்றார்.இதனால் அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள், இந்தத் தகவலை ஏன் நீங் கள் முன்னதாக தெரிவிக்க வில்லை எனக்கேட்டதற்கு தெளிவான பதில் கிடைக்க வில்லை.அரசாங்கத்தின் மின் மீட்டர் வந்துவிடும் எனத் தெரிந்தே, பொதுமக்களை தனியாரிடம் தள்ளிவிட்டு ஆதாயம் அடைந்தது யார் என்பதை மின்வாரியம் தான் தெளிவுபடுத்த வேண் டும்.

Leave A Reply

%d bloggers like this: