வண்டிப்பெரியார்,ஜூன்6-இந்திய மாணவர் சங்கத் தலைவர் அனிஸ்ராஜனை கொலை செய்த கொலை யாளிகளை கைது செய்ய வேண்டும். எம்.எம்.மணிக்கு எதிராக தொடுக்கப்பட் டுள்ள பொய்வழக்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை களை முன்வைத்து வருகிற ஜூன் 12ம் தேதி தொடுபுழா டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத் துவதென மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டக்குழு முடிவு செய் துள்ளது.இது குறித்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் கே.பி.மேரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.என்.விஜயன், பி.எஸ். ராஜன், சி.வி.வர்கீஸ், மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.என்.ஜோசப், கே.ஆர். சோதரன் ஆகியோர் எம்.எம்.மணி மீது போடப் பட்டுள்ள பொய்வழக்கை சட்டரீதியாக எதிர்கொள் வோம். பொய் வழக்கு போட்டு கட்சியையும் பிற தொண்டர்களையும் அவ மானப்படுத்த அரசின் உதவி யுடன் காங்கிரஸ் தலைவர் கள், முயல்கின்றனர் எனக் கூறிய தலைவர்கள் காங்கி ரசின் அரசியல் சூழ்ச்சியை மக்களை திரட்டி எதிர் கொள்வோம்.முதற்கட் டமாக ஜூன் 12ம் தேதி போராட்டம் நடைபெறும். அடுத்தகட்ட போராட்டங் கள் குறித்து பின்னர் தீர் மானிக்கப்படும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.