மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்உரிமம் ரத்து
கோவை, ஜூன் 7-கோவை சரக போக்குவரத்து எல்லைக்குள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சரக துணை ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி கோவை, திருப்பூர் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம்உள்ளிட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 49 பேர் பிடிபட்டனர். இதில் 8 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் 41 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்
சத்தி, ஜூன் 7- பிறப்பு மற்றும் இறப்பிற்கு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் சான்றிதழ்கள் வழங்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது.இது குறித்து நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில்: சத்தியமங்கலம் நகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்பிற்கு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் சான்றிதழ்கள் வழங்கும் முகாம் ஜூன்-8ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறகிறது. எனவே நகராட்சியில் கட்டணம் செலுத்தி, மனுதாக்கல் செய்து சான்றுகள் பெற்று கொள்ளும்படியும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அன்றைய தினமே சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: