இழுத்து மூடப்படும் ஜெனரல் மோட்டார்ஸ்
கனடா நாட்டின் பிரபல கார் தொழிற்சாலை ஜெனரல் மோட்டார்ஸ். இந்நிறுவனம் செவ்ரோலெட் இம்பாலா, எகுய்னோக்ஸ் வகைகளை சேர்ந்த கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனிடையே, இத்தகைய கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் இவற்றிக்கான ஏற்றுமதியும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக போதிய லாபம் கிடைக்காததால் இந்நிறுவனம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும், ஜெனரல் மோட்டார் நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற கடன்களை செலுத்த முடியாமல் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக கார் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகத்தால் முடிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவனத்தை ஓட்டுமொத்தமாக மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு (2013) ஜூலை மாதம் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவின் காரணமாக அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி விமானம் சோதனை ஓட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்டின் என்பவர் சூரிய சக்தியை கொண்டு இயங்கும் வகையில் விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதன்படி விமானத்தின் மேல்பகுதி முழுவதும் சூரிய சக் தியை மின்சாரமாக மாற்றும் சோலார் தகடுகள் பொருத் தப்பட்டுள்ளன. இவ்விமானம் ஸ்பெயின் நாட்டிலிருந்து மொராக்கோ நாட்டிற்கு செல்வதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக துவங்கியது. ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், சுமார் 12ஆயிரம் அடி உயரத்தில் பறக்க உள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கும் மொராக்கோ நாட்டின் தலைநகரான ரபாட் நகருக்கும் இடைப்பட்ட 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவை இந்த சூரிய சக்தி விமானம் கடக்க உள்ளது. இச்சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் எதிர்காலங்களில் சூரிய சக்தியை கொண்டு இயங்கும் வகையில் விமானப் போக்குவரத்து வளர்ச்சி பெறும் என நம்பப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: