அங்கன்வாடி பணியிடங்களுக்குவிண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
திருச்சிராப்பள்ளி, ஜூன் 7-திருச்சி மாவட்டத்தில், அங்கன்வாடி பணியாளர் கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியா ளர், காலிப் பணியிடங் களுக்கு 10.06.2012 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், 20.6.2012 வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. மேலும் விப ரங்களுக்கு, “மாவட்ட திட்ட அலுவலர், ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், 3, வடக்குத்தெரு, மன்னார் புரம், திருச்சி-20, தொலை பேசி எண். 04312420090” என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலை வர் ஜெயஸ்ரீ முரளி தரன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், ஜூன் 7-திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றி யத்தில் நடைபெறும் தூர் வாரும் பணி மற்றும் நெய் வேலி காட்டாமணக்கு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் நேரில் ஆய்வு செய் தார்.கொரடாச்சேரி வெட் டாற்றின் குறுக்கே கட் டப்பட்டு வரும் பாலத் தினையும் பார்வையிட்டு அந்த கட்டுமானப்பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என்று உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்த ரவிட்டார்.செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை எஸ்.சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா னந்தம், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், பொறியாளர் சுந்தரலிங் கம் ஆகியோர் இந்த ஆய் வின் போது உடன் இருந் தனர்.

பெரியகுளம்: கிணற்றில் தாய்-குழந்தை பிணம்
தேனி, ஜூன் 7-பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வெங் கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி வெள்ளைதாய் (26). இவருக்கு திருமண மாகி நான்கு ஆண்டுகளா கிறது. தேன்மொழி என்ற 3 வயது குழந்தை உள்ளது . வெள்ளத்தாய் மற்றும் குழந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.இந்நிலையில் அருகில் உள்ள கிணற்றில் முன்று வயது குழந்தை தேன் மொழி, வெள்ளைதாய் அகியோர் பிணமாக மிதந்து கிடந்துள்ளனர்.சம்பவம் குறித்து வெள்ளைதாய் தகப்ப னார் சங்கர் என்பவர் தென் கரை காவல்நிலையத்தில் கொடுத் துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மர்ம மரணம் குறித்து பெரியகுளம் கோட்டாட்சியர் விசார ணைக்கு உத்தரவிடப் பட்டு, கோட்டாட்சியர் அனிதா விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

அணை திறப்பு
தேனி, ஜூன் 7-தேனி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க பெரியாறு அணை யிலிருந்து வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் திறக் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி சாமி தெரிவித்துள்ளார் .பெரியார் அணையில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்கும் வரை சுழற்சி முறையில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: