சந்திரசேகர் ஆசாத்பிறப்பிடத்தில் புதிய கட்டிடம்
போபால், ஜூன் 7-பப்ரா எனப்படும் ஆசாத் நகரில் சுதந்திரப் போராளி சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்த இடத்தில் புதிய கட்டிடத்தை கட் டும் பணியை ஜபுவா மாவட்ட நிர்வாகம் தொடங் கியுள்ளது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக் கியப் பிரமுகர்களிடம் அது சம்மதம் பெற்றுள்ளது.23.7.1906ல் ஆசாத் பிறந்த இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டப் படுகிறது. 1970ம் ஆண்டில் கிராமத் தலைவர் நானா லால் ஜெயின் மக்களின் அனுமதியோடு பழைய கட்டிடத்தை இடிந்தார். இதுதான் ஆசாத் பிறந்த இடம் என்று டாய் மா காளி பேகம் அடையா ளம் காட்டிய இடத்தில் புதிய கட்டிடம் கட்டப் பட்டது. 1998ல் பப்ராவின் பெயர் ஆசாத் நகர் என மாற்றப்பட்டது. 1970ல் கட்டப்பட்ட கட்டிடம் சிதிலம் அடைந்துவிட் டது. மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்துக் கட் சிகளின் பிரதிநிதிகள் மற் றும் பிரமுகர்கள் கூட்டத் தில் புதிய கட்டிடம் கட்டு வதென முடிவெடுக்கப்பட்டது.

ஷாநவாஸ்கானின் கையெழுத்தைப் போட்ட பயண முகவர்
புதுதில்லி, ஜூன் 7-பாஜக மூத்த நாடாளு மன்ற உறுப்பினர் ஷாந வாஸ் கானின் கையெ ழுத்தை பயண முகவர் ஒருவர் போட்ட சம்பவம் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார் பாக அவருடைய தனி உத வியாளர் காவல்துறையி டம் புகார் செய்தபின் சம் பவம் வெளியில் தெரிந்தது.காத்திருப்போர் பட்டி யலில் உள்ள பயணச்சீட் டை உறுதிப்படுத்த அவ ரின் லெட்டர் ஹெட்டை யும் கையெழுத்தையும் பயன்படுத்தியுள்ளனர். அம்பாலா ரயில் நிலை யத்தில் இதுநடந்தது. இ-டிக்கெட் என்பதால் பி என்ஆர் எண்ணை வைத்து மற்ற விவரங்களைப் பெற இயலவில்லை என்றும் புகா ரில் கூறப்பட்டுள் ளது.நிசாமுதின் ரயில் நிலை யத்தில் பொற்கோவில் ரயிலின் எஸ் 3 பெட்டியில் இருக்கை 35, 36ல் புகாரி டப்பட்ட பயணச்சீட் டைப் பயன்படுத்தி முக மது உமர், அவருடைய உறவினர் அபுஹம்சா ஆகி யோர் பயணம் செய்ய விருந்ததை காவல்துறை கண்டது. மத்திய தில்லி யில் உள்ள குப்ரான் அன்ட் ரபியுல்லா என்ற பய ண முகவர் அனுமதிச்சீட்டை உறுதிசெய்தார் என்று அவர்கள் கூறினர். முக வரை அடையாளம் காட் டமுடியும் என்றும் அவர் கள் சொன்னார்கள். அதை யடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவோயிஸ்ட் கைது
புதுதில்லி, ஜுன் 7 -பல கொலை வழக்குக ளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என சந்தே கிக்கப்படும் 27 வயதான மாவோயிஸ்ட் சிவா என்ற சிவக்குமாரை தில்லியில் காவல்துறை கைது செய் தது. அவரிடமிருந்து 9 மி.மீ. கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.கைதாகியுள்ள மாவோ யிஸ்ட் ஒரு ஆயுதம் மற் றும் வெடி பொருள் நிபு ணர் என்றும் அவர் கூறி னார். கொலை வழக்குக ளில் மட்டும் அல்லாது, காவல்துறையினர் தாக்கப் பட்ட சம்பவங்களிலும் அவர் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தார் என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் ஜார்கண்ட் டில் ராஞ்சியைச் சேர்ந் தவர்.

Leave A Reply

%d bloggers like this: