மஞ்சள் விலைகடும் வீழ்ச்சி
ஈரோடு, ஜூன் 7-ஈரோடு அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற் றும் ஈரோடு, கோபி கூட்டு றவு விற்பனை சங்கத்திலும், வெளி மார்க்கெட்டிலும் ஒரு குவின்டால் விரலி மஞ் சள் கடந்த வாரம் ரூ.3600 முதல் ரூ.3800 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.3500 வரை யும் விற்றது. மஞ்சள் சீசன் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதாலும், மார்க்கெட் டிற்கு வரத்து அதிகமாக இருப்பதாலும் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.விரலி மஞ்சள் குவின் டால் விலை ரூ.3509 ரூ.3139, கிழங்கு மஞ்சள் ரூ.3339 ரூ. 3069 ஆக இருந்தது. ஒரே வாரத்தில் ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.500 வரை வீழ்ச்சியடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
சென்னை, ஜூன். 7 -முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரான கே.பி.பி. சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.திருவொற்றியூரை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு. இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு மாயமானார் கள். இது தொடர்பாக இவ ரது குடும்பத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அதில் முன் னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி, அவரது தம்பிகள் சங் கர், சொக்கலிங்கம் ஆகி யோர் வேலுவையும், செல்லத் துரையையும் கடத்தி கொலை செய்துவிட்டதாக கூறி இருந்தனர்.இந்த கொலை வழக்கில் கே.பி.பி.சாமி கைது செய் யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் கே.பி.பி.சாமி மனு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பழனிவேல், அவ ருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்தார். அதன்படி கே.பி.பி. சாமி தினமும் மாலை விழுப் புரம் குற்றவியல் நீதிமன்றத் தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்றும் இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண் டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

வேலூர் ஐடிஐயில் விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூர், ஜூன் 7-வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பொறியியல் மற்றும் பொறி யியல் அல்லாத தொழிற் பயிற்சியில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களின் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.1.8.2012 முதல் தொடங்க உள்ள தொழிற் பயிற்சியில் 14 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்கு உட்ட அனைவ ரும் விண்ணப்பிக்கலாம். பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம் மியர் மோட்டார் வைண் டிங், மின்சார பணியாளர், கட்டிடப்படவரையாளர் மற்றும் தோல் பொருள், காலணி ஆகிய தொழிற் பிரிவு களுக்கும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பற்ற வைப்பவர், உலோகத் தகடு வேலையாள், கம்பியாளர், தச்சர் ஆகிய பிரிவுகளிலும் பயிற்சி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் ஜூன் 29ம் தேதிக் குள் வந்து சேர வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: