பகுதி நேர பொறியியல் படிப்பு: ஜூன் 22ல் கலந்தாய்வு தொடக்கம்
சென்னை, ஜூன் 7-தொழில் நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறி யியல் கல்லூரிகளில் 2012-13 கல்வியாண்டுக்கான முத லாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக் கான கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 22ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை கோயமுத்தூர், தொழில் நுட்பக்கல்லூரியில் நடை பெறவுள்ளது.22ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித் துறை) மற்றும் சிவில் இஞ்சி னியரிங் (கட்டிடவியல்) பிரி வுக்கும், 23ம் தேதி மெக் கானிக்கல் இஞ்சினியரிங் (இயந்திரவியல்) பிரிவுக்கும், 24ம் தேதி எலக்டிரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / கணிணி பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.மேலும் விபரங்களை றறற.வ-னவந-யீவநெ.உடிஅ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மாணவ / மாணவியர் தங்களது மதிப் பெண் மற்றும் பணி அனுப வம் பற்றிய சந்தேகங்கள் ஏதுமிருப்பின் ஜூன் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் கோயமுத்தூர் தொழில் நுட் பக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் செயல் அலுவலகத்தில் நேரில் சென்று தெளிவு பெறலாம். விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப் புக் கடிதம் தபாலில் அனுப் பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறவில்லை யெனினும் தகுதியுள்ள மாண வர்களும் மேற்கூரிய தேதி களில் அசல் சான்றிதழ்களு டன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு
சென்னை, ஜூன் 7-பள்ளிக்கூடங்களில் சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 20 ந் தேதி வரை நீட் டிக்கப்பட்டு உள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங் களில் 31.7.2011 அன்று வரை காலியாக உள்ள 4,149 சத்து ணவு அமைப்பாளர், 5,465 சமையலர் மற்றும் 6,442 சமை யல் உதவியாளர் ஆக மொத்தம் 16,056 காலிப்பணியிடங் களில் தகுதியான பெண்களை வேலைக்கு அமர்த்திட முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தகுதியானவர்கள் ஜூன் 5 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 20 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளியில் சத்துணவு பணியாளர்கள் நேரடி நிய மனத்திற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 5 ந் தேதியில் இருந்து ஜூன் 20 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு கிராமப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டருக்கும், நகர்ப்புறமாக இருந்தால் மாநகராட்சி கமிஷனருக்கும் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.