பெய்ஜிங், ஜூன் 7-சீனாவுடனான நட்புற வுக்கு இந்தியா தீவிர முன்னு ரிமை அளிக்கிறது என வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சீன துணைப் பிரதமர் லீ கேகி யாங்கிடம் தெரிவித்தார்.இந்த இருநாட்டுத் தலை வர்களும் புதன்கிழமை யன்று சீனா – இந்தியா எதிர் கால நட்புறவு குறித்தும், உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர். லீ கேகியாங் சீனாவின் அடுத்த பிரதமராக ஆவார் என பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவுடன் மிக நெருக்கமான பொருளா தார உறவுகளை இந்தியா மேற்கொள்ள விரும்புகிறது.சீன துணைப்பிரதமரி டம் கிருஷ்ணா கூறுகை யில், மிகச்சிறந்த பொறுப்பு களை ஏற்க உள்ள தலைவரி டம் சீனாவுடன், உறவு மேற் கொள்ளும் விஷயத்தில் இந்தியா தீவிர முக்கியத் துவம் அளிக்கிறது எனக் கூறினேன் என்றார். எதிர் கால, அடுத்த 10 ஆண்டுகளுக் கான உறவு குறித்து இந்த ஆலோசனை நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.லீ கூறுகையில், கம்யூ னிஸ்ட் கட்சியின், இளை ஞர் குழுவின் உறுப்பினராக 1985ம் ஆண்டு இந்தியா சென்றேன்.
அந்த ஆண்டில் காணப்பட்ட அதே இந் தியாவாக தற்போது இல் லை. எனவே, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன் என்றார்.பெய்ஜிங்கில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங் கேற்பதற்காக எஸ்.எம். கிருஷ்ணா வந்துள்ளார். 2005ம் ஆண்டு முதல் இந் தியா, இந்த மாநாட்டின் பார்வையாளர் நாடாக பங்கேற்று வருகிறது.6 உறுப்பினர் பாது காப்பு குழுவில், பூரணத்து வம் பெற்ற உறுப்பினராக இருக்க இந்தியா விரும்புகி றது என கிருஷ்ணா தனது பேச்சுவார்த்தையில் உணர்த்தினார். புதிய உறுப் பினர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து நட வடிக்கை மேற்கொள்ளப் படுகிறது என லீ கூறினார். வழிமுறைகளை முடிவு செய்ய நாங்கள் சாதகமான வழியில் நகர்ந்துள்ளோம். வழி முறைகளில் குழு அமைப்புக்கு 3வது செயல் மொழி குறித்து, இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்றும் இந்திய அதிகாரி கள் கூறினர்.சீனாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து, கிருஷ்ணா வலியுறுத்தி கூறுகையில், 2005ம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து இங்கு வருகிறது. ஷாங்காய் வெளியுறவுத்துறை அமைச் சராக, சீனாவுடன் இது மூன் றாவது சந்திப்பாகும். சீனா வுடன் தீவிர நெருக்கத்தில் விருப்பம் காட்டவில்லை என்றால், இங்கு தொடர்ந்து வந்திருக்க மாட்டோம் என்றார்.பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய வை புதன்கிழமையன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு குழுவின் பார்வை யாளர் நாடுகளாக நியமிக் கப்பட்டன. இந்த நாடுக ளின் குடியரசுத்தலைவர்கள் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியா வில் உள் கட்டமைப்பு பெரும் விரிவாக்கம் கொண் டதாக உள்ளது. இதில் சீனா வின் முதலீடு தேவை என கிருஷ்ணாகூறினார்.தில்லியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச் சர் லியோன் பனேட்டா குறித்து சீன ஊடகம் கேட்டபோது, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு உரிமை இருந்ததை வலியுறுத்தினார். அதே போன்று தென் கடல் பகுதியில், வியட்நாமுக்கு இந்தியா ஆதரவு காட்டுவது குறித்து கேட்டபோது இவை சர்வதேச நீர்ப்பகுதி கள் அங்கு நாடுகள் இடை யே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும். நாங்கள் அந்த நிலைபாட்டில்தான் அதனைப்பார்க்கிறோம் என கிருஷ்ணா கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: