மதுரை, ஜூன் 7-மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல் லாது என்று தொடரப் பட்ட வழக்கில், தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தக் கூடாது என்று ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.2009ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிவகங் கை மக்களவைத் தொகுதி யில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ராஜ கண்ணப்பன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வர் ப.சிதம்பரம். கடைசி சுற் றுவரை சிதம்பரம் வென் றாரா இல்லையா என்ற குழப்பத்துக்கு மத்தியில் திடீ ரென அவர் 3 ஆயிரம் வாக் குகள் வித்தியாசத்தில் வென் றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜகண் ணப்பன் வழக்குத் தொடர்ந் தார்.இந்த வழக்கின் விசார ணை நடைபெற்று வருகி றது. இந்த வழக்கில் தம்மை கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தக் கூடாது என்று ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந் தார். இம்மனுவுக்கு எதிராக ராஜகண்ணப்பன் தரப்பும் பதில் மனுத்தாக்கல் செய் திருந்தது.சிதம்பரத்தின் மனுவை ஏற்பதா? நிராகரிப்பதா? என் பது குறித்து வியாழனன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார்.ஸ்பெக்ட்ரம் அலைவ ரிசை ஊழலில் ஏற்கெனவே ப.சிதம்பரத்தின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குள் ளான இந்த வழக்கில் வியா ழனன்று தீர்ப்பளிக்கப்பட் டது. ப.சிதம்பரம் விலக்கு கோரி தாக்கல் செய்த மனு வை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.இத்தீர்ப்பையடுத்து இந்த வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது.

Leave A Reply