நம்புங்கள்
எம்ஜிஆர், என்டிஆர், டி.ஆர். ராஜகுமாரி, ஜி. வரலட்சுமி, ராஜசுலோச்சனா, ஈ.வி. சரோஜா, கே.ஏ. தங்கவேலு, சந்திரபாபு இப்படி பெரிய நட்சத்திரப் பட்டாளம் கொண்ட படம் “குலேபகாவலி” அதுமட்டுமல்ல. இந்த படத்தின் முக்கிய காட்சிக்காக பெங்களூரில் ஜெமினி சர்க்கஸில் இருந்து ‘சங்கர்’ என்ற 18 அடி புலி வரவழைக்கப்பட்டது. அது சரி, இந்தப் பட்டியல் எல்லாம் இன்று எதற்கு என்கிறீர்களா… 1955ல் வெளிவந்த ‘குலேபகாவலி’ படத்தை டி.ஆர், ராமண்ணா இயக்கி தயாரிக்க ஆன செலவு எவ்வளவு தெரியுமா…? சொன்னால் நம்பமாட்டீர்கள் – வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான், இன்றைக்கு இந்த பணத்தில் மூன்று நாள் படப்பிடிப்பு தான் நடத்த முடியும்.

நடிகர் சங்கம்
நடிகர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் தேவை உள்ளது என 1938ல் அன்றைய பிரபல நடிகர் எம்.வி. மணி அதற்கான ஆரம்ப முயற்சிகளில் இடைவிடாது செயல்பட்டார். அந்த ஆண்டு டிசம்பரில் நடிகர் சங்கத்தை ஆரம்பிப்பதற்கான அமைப்புக் கூட்டம் சென்னை காங்கிரஸ் மாளிகையில் நடைபெற்றது, பி.எஃப், வேலுநாயர், கே.பி. கேசவன் முறையே தலைவர், துணைத் தலைவர், செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்றைய கலைஞர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்த நடிகர் சங்கம் தோன்றிய ஆறே மாதத்தில் பட்டுப் போனதாம்.

Leave A Reply

%d bloggers like this: