காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்ப முடியாத அளவுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள் – பிரதமர் மன்மோகன்சிங்.ச.சா-ஏன்… ஊழல் தொகை ரொம்பக் குறைவா இருக்கா…?
* * *
எங்கள் போராட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல – யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ்.ச.சா- அதுதான் ஊழலுக்கு எதிரானது இல்லையே…?
* * *
பிரதமருக்கு எதிராக நாங்கள் சதி செய்யவில்லை- பாஜக கருத்து.ச.சா – சரியாத்தான் இருக்கும்… சொந்தக் கட்சிக்காரங் களுக்கு எதிரா சதி பண்ணுறதுலதான் முனைப்பா இருக்காங்க…
* * *
நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சனையில் மாநில முதல்வரோ, அமைச்சர்களோ கடைசி வரையில் தலையிட வில்லை – திமுக தலைவர் கருணாநிதி.ச.சா – மத்திய அரசே நீங்கதான… நிரந்தரத் தீர்வுக்கு ஏற்பாடு பண்ணலாமே…??

Leave A Reply

%d bloggers like this: