கூடலூர், ஜூன் 7-பந்தலூர் அடுத்துள்ள குந்தலாடி பகுதியிலிருந்து கேரளத்துக்கு கடத்திய மரங்களை லாரியுடன் வனத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம் பிதர்க்காடு வனச்சரகத்துக்குட்பட்ட குந்தலாடி பகுதியிலிருந்து அனுமதியின்றி மரங்களை வெட்டி கொளப்பள்ளி, தட்டாம்பாறை, அய்யன்கொல்லி வழியாக கேரளாவுக்கு லாரியில் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, வனச்சரக அலுவலர் கணேசன் தலைமையில் வனவர் செல்வராஜ், வனக் காவலர்கள் ராபர்ட், லூயிஸ், பிரகாஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தட்டாம்பாறை – அய்யன்கொல்லி வழியாக வந்த ஒரு லாரியை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.இந்த சோதனையின் போது லாரியில் அரிய வகை வெண்தேக்கு, பலா உள்ளிட்ட காட்டு மரங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குந்தலாடி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரன் (28), லாரி உரிமையாளர் தாமஸ் (36) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து வனத் துறையினர் விசாரித்து வருகினறனர்.

Leave A Reply

%d bloggers like this: