இந்திய விளையாட்டு துறைக்கு வந்துள்ள விருது பெறுவோருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர் இடம் பெறவில்லை. இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ள இவ்வாண்டில் கிரிக்கெட் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.இந்திய கிரிக்கெட் வாரியமும் விளையாட்டு அமைச்சகமும் தவறுக்கு பொறுப்பேற்கத் தயாராகவில்லை. பரிந்துரை படிவமும் தகுதியும் குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று வாரியம் கூறுகிறது. விளையாட்டு விருதுக்காக பரிந்துரைக்கப்படும் பெயர்களை ஏப்ரல் 30க்குள் அனுப்பிவைக்க வேண்டுமென்று விளையாட்டு அமைச்சக இணைய தள அறிவிப்பு கூறுகிறது. கிரிக்கெட் வாரியத்துக்கும் விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

Leave a Reply

You must be logged in to post a comment.