இடுக்கி, ஜூன் 7-தொடுபுழையில் மாணவர்கள் மீது காவ லர்கள் நடத்திய கொடூரமான தடியடிக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள் ளது. விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சிவராஜனும், செயலாளர் என்.வி.பேபியும் காவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடிபட்டு மருத் துவமனையில் உள்ள மாணவர் சங்க தலை வர்களை சிவராஜன் நேரில் சந்தித்து ஆறு தல் கூறினார்.தொடுபுழையில் மாணவர்கள் மேல் காவலர்கள் நடத்திய தடியடி தாக்குதலை கண்டித்து சிபிஐ(எம்) தொடுபுழை பகுதிக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் இடதுசாரி கள் மீதான தாக்குதல் வேட்டையின் உதாரணமாகத்தான் தொடுபுழையில் நடந்த சம்பவங்கள் உள்ளன என்று பகுதிக் குழுச் செயலாளர் வி.வி.மத்தாயி அறிக்கையில் கூறியுள்ளார்.மாணவர் சங்கத்தின் தலைவர் அனிஷ் ராஜனின் கொலைக்கு காரணமான காங் கிரஸ் தலைவர்களின் தொடர்பை மறைப்ப தற்காகவே, தொடர்ந்து நடக்கும் போராட்டங் களை காவல்துறையை உபயோகித்து எதிர்க்க யுடிஎப் அரசு முயல்கிறது. அனி ஷின் கொலைக்கு காரணமானவர்களை சாட்சியத்தை வைத்து கைது செய்வதற்கு பதிலாக, எந்த சம்பந்தமும் இல்லாத சிபி ஐ(எம்) தொண்டர்களின் பெயரில் கொலை குற்றம் சாட்ட, யுடிஎப் தலைவர்களின் அறி வுரைப்படி காவல்துறை முயல்கிறது. உம் மன்சாண்டி அரசு கேரளத்தில் சிபிஐ(எம்) -யை எதிர்கொள்ள காவல்துறையை தவறான வழியில் செயல்படுத்துகிறது. போலீசின் இந்த அடக்குமுறையை எதிர்கொண்டு போராட்டத்தைத் தொடர்வோம் என்று மத்தாயி கூறினார்.
இளைஞர் அணி -வழக்கறிஞர் அணி
இளைஞர் அணியும், வழக்கறிஞர் யூனியனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனிஷ்ராஜை கொலை செய்த கொலை காரர்களையும், அவர்களுக்கு பின்னால் செயல்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் களையும் பாதுகாக்கும் காவல்துறையின் நடவடிக்கையை வாலிபர் சங்க தொடுபுழை பகுதிக் குழு தனது அறிக்கையில் கண்டித் துள்ளது.கொலைகாரர்களை கைது செய்து சட் டத்தின் முன் கொண்டு வருவதற்கு பதிலாக காங்கிரஸ் தலைவர்கள் கைகாட்டும் நபர் களை குற்றவாளிகளாக்கும் காவல்துறை யின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கெதிராக நடக்கும் போராட் டங்களை இரத்தத்தில் மூழ்கடித்து தகர்த்து விடலாம் என்று நினைப்பவர்கள், கேரள மாணவர் மற்றும் இளைஞர் அணியினர் இதற்கு முன் நடத்தியுள்ள போராட்ட சரித் திரத்தை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.மேற்கண்டவாறு பகுதித் தலைவர் வி.பி. திலீப்குமாரும், செயலாளர் கே.எம்.சலாமும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: