சிதம்பரம், ஜூன் 7-நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முருகை யன் (62)கரும்பு சாகுபடியில் நட்டம் ஏற்பட்டதால் கட லூர் மாவட்டம் சிதம்பரத் தில் உள்ள மருத்துவ கல் லூரி மருத்துவமனை வளா கத்தில் கடந்த 6 ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண் டார்.அவரது சட்டையை சோதனை செய்தபோது, தமிழக முதல்வர், நாகை மாவட்ட ஆட்சியர், சர்க் கரை ஆலை நிர்வாகிக ளுக்கு கடிதம் எழுதி சட்டை பையில் வைத்திருந்ததை காவல்துறையினர் கைப் பற்றினர்.இந்த தகவலை அறிந்த தும் தற்கொலை செய்து கொண்ட விவசாயின் சொந்த ஊரான மயிலாடு துறை அருகே உள்ள மாபடுகை கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைவ ரும் சிதம்பரம் தொகுதியின் சட்டபேரவை உறுப்பினரு மான கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடு துறை வட்டச் செயலாளர் ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் ராமனுஜம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் மேக நாதன் ஆகியோர் விவசாயி யின் குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினர்.பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய கே.பால கிருஷ்ணன், இந்த சம்ப வத்தை கேள்விபட்டதும் மிகவும் வேதனை அடைந் தேன். முதல் வேலையாக இவரது வீட்டுக்கு சென்று அவர்களது துக்கத்தில் பங் கெடுக்க வேண்டும் என்று நினைத்து நான் காலையிலே வந்து விட்டேன் என்றார்.தற்கொலை செய்து கொண்ட முருகையன் மிக வும் சாதுவானவர். யாரிட மும் அடாவடி செய்ய கூடி யவர் இல்லை.
அப்படி வாழ்ந்த அவரே இப்படி ஒரு காரியம் செய்து கொண்டது மிகவும் வேதனையாக உள் ளது என்றும் அவர் கூறி னார்.விவசாயி முருகையன் தற்கொலை செய்து கொண்ட தற்கு தமிழக அரசுதான் பொறுப்பு. ஏன்? என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பிகா கூட்டுறவு சக்கரை ஆலையில் வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. அப்போது ஆலையில் கரும்பு அறவை நிறுத்தபட் டது.இதனால் கரும்பு பயி ரிட்டு வெட்டும் தருவாயில் உள்ள விவசாயிகள் கடுமை யாக பாதித்தனர். அதில் முரு கையனும் ஒருவர். ஆனால் அரசு தரப்பில் விவசாயிக ளின் பிரச்சனையை முக்கிய பிரச்சனையாக கருதவில்லை. அலட்சியம் காட் டினர். இதனால் சக்கரை ஆலை தொழிலாளர்களின் பிரச்ச னையை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இத னால் கரும்பு வெட்ட அனு மதி கிடைக்கவில்லை. விவ சாயிகள் சாகுபடி செய்த கரும்பு பயிர்கள் முழுவ துமே கீழே மடிந்து விட் டது. மேலும், கடுமையான மின் வெட்டு, வறட்சியா லும் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்ககாமல் பாதிக்கு மேற்பட்ட பயிர் கள் கருகி விட்டது.முருகையன் அவரு டைய மனைவி சரோஜா பெயரில் உள்ள நிலத்தின் பேரில் ரூ. 3 லட்சம் அடமா னம் வாங்கி தான் கரும்பு பயிர் சாகுபடி செய்துள் ளார். கரும்பு தற்போது காய்ந்து கிடப்பதை கண்டு சில நாட்களாகவே மன உலைச்சலால் இருந்துள் ளார்.அந்த வேதனை தாங்க முடியாமல்தான் இந்த முடிவு எடுத்துள்ளார். மாநில அரசு, விவசாயிகள் பிரச் சனையில் அக்கறை காட் டாமல் மேம்போக்கான விளம்பரம் மட்டும் செய்து கொண்டு இருப்பது விவ சாயிகளை காப்பதாக தெரிய வில்லை என்றும் பாலகிஷ் ணன் குற்றம் சாட்டினார்.தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட இம்மாதிரி யான தவறான செயலுக்கு செல்லக்கூடாது. அதற்கு விவ சாயிகள் பிரச்சனையை அரசு அக்கறையுடன் கவனிக்க வேண்டும் என்றும் உயிர் இழந்த விவசாயின் குடும்பத் துக்கு ரூ .5 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என் றும் கேட்டுகொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: