சென்னை, ஜூன் 7 –
ஆட்டோ தொழிலா ளர் சங்கம் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் எல் ஐசி ஜனஸ்ரீ கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற் றது. வில்லிவாக்கம் பகுதிக் குழுக்குஉட்பட்ட கேல்லிஸ், பழனி ஆண்டவர் கோயில், அன்பு காலனி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை சார்ந்த 85 மாணவர்களுக்கு ரூ.1 லட் சத்து 25 ஆயிரம் கல்வி உதவி நிதியாக வழங்கப்பட் டது.நிதியை சங்கத்தின் தலை வர் பா.கருணாநிதி, பொதுச் செயலாளர் ஏ. எல்.மனோகரன், பொரு ளாளர் பழனி, வில்லிவாக் கம் பகுதி தலைவர் எஸ்.சுந் தரம் இவ்விழாவில் தலைமை தாங்கினார். செயலாளர் தாமஸ், பொருளாளர் சி.பி. நாரயாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
அம்பத்தூர், ஜூன் 7 –
அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே உள்ள கச்சனாங்குப்பம் கங்கை யம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் மாரி. இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர்களது மகள் ஆனந்தி (19).ஆனந்தி அண்ணாநகரி லுள்ள வள்ளியம்மாள் கல் லூரியில் படித்து வருகி றார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி ஸ்காலர்ஷிப் வாங்குவதற்காக கல்லூ ரிக்குச் சென்றார். கல்லூ ரிக்குச் சென்ற ஆனந்தி வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் தாய் அம் பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Leave A Reply