கள்ளக்குறிச்சி, ஜூன் 7-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி தனியார் உயர் நிலைப் பள்ளி மாணவன் சேஷன் பத்தாம் வகுப்பு தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளான். இந்த மாணவன் தமிழ் 97, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100 சமூக அறி வியல் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இது குறித்து அந்த மாணவன் கூறுகையில், நான் மாநிலத்தில் முதலிடம் வர வேண்டும் என்று படித் தேன். ஆனால், மாவட்ட அளவில்தான் முதலிடம் வர முடிந்தது. பள்ளி ஆசிரி யர்கள் அளித்த ஊக்கத்தால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்றார்.ஏ.கே.டி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கவியரசி 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பள்ளியில் 239 மாண வர்கள் 450க்கும் மேல் மதிப் பெண்கள் பெற்றுள்ளனர. 453 மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பாடப் பரிவுகளில் 52 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இத்தகைய சாதனை படைத்த மாணவர் களுக்கு பள்ளியின் தாளா ளர் மகேந்திரன், செயலா ளர் லட்சுமி பிரியா ஆகி யோர் வாழ்த்து தெரிவித் தனர்.

Leave A Reply