ஆம்! அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கோர தாண்டவத்தை நினைவூட்டும் இப்படத்திற்கு 40 ஆண்டுகள் நிறை வுறுகிறது. அமெரிக்க மக்களே அவர் களின் அரசுக்கு எதிராக வீறு கொண் டெழுந்த வியட்நாம் போரின் போது 1972ம் ஆண்டில் ஜூன் 8ம் நாளில் எடுக்கப் பட்ட இப்படம் உலக மக்களின் மனச் சாட்சியைக் கிழித்துப்போட்டது.வியட்நாமின் தென்பகுதியை ஆக்கிர மித்திருந்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் மக்கள் நடத்திய வீரஞ் செறிந்த போராட்டத்தின் அவலமான நினைவுக் குறிப்புகளில் இப்புகைப்படம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. போர்க்களத்தின் மத்தியில் நிக் உட் (சூஐஊமு ருகூ) என்ற அசோசியேட்டட் பிரஸ் புகைப் படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப் படம் இது.இந்தப் புகைப்படத்தில் ஆடையின்றி ஓடிவரும் ஒன்பது வயதுப் பெண்ணின் பெயர் கிம் புக் (முஐஆ ஞருஊழ).நாபாம் குண் டால் தாக்கப்பட்ட கிம் புக் உடலின் வேத னையால் கதறியபடி சாலையின் நடுவே ஓடி வருகிறார். அமெரிக்கப்படைகள் வீசிய நாபாம் எரிகுண்டு அவர் மேல் தாக் கியது. குண்டின் கலவையில் இருந்த வேதியியல் பொருட்கள் அவருடைய சதையை எரித்து எலும்பையும் தாக்கின. அவர் அதன் பாதிப்பிலிருந்து மீள பல ஆண்டுகள் கழிந்தன. 17 அறுவைச் சிகிச் சைகளும் தேவைப்பட்டன.
நிக்சனின் சந்தேகம்
வியட்நாம் யுத்தம் அமெரிக்க ஜனாதி பதி நிக்சனின் ஆட்சிக்காலத்திலும் நடந் தது. நிக் உட் எடுத்த புகைப்படம் உலகள வில் விவாதிக்கப்பட்டது. அவ்வாண்டிற் கான புலிட்சர் விருதும் இப்படத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து நிக்சன் தனது தலைமை நிர்வாக அதிகாரியுடன் (ஊழஐநுகு டீகு ளுகூஹகுகு) நடத்திய உரையாடல் பதிவு கள் வெளியாயின. பதிவுகள் வெளியான வுடன் வியட்நாம் யுத்தம் எவ்வளவு நம்ப கமான உண்மையோ, அதுபோன்று இப் படமும் நம்பகமிக்க உண்மை என்று நிக் உட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். உயிரை வெறுத்து பீதியுடன் ஓடிவரும் அச்சிறுமி இன்றும் உயிருடன் இருக்கிறார். அவர் இப்படத்திற்கு உயிர்ச்சாட்சியாக விளங்கு கிறார் என்றும் அவர் கூறினார்.இந்தப் புகைப்படத்தை எடுத்தவுடன் நிக் உட், கிம் புக்கையும் காயமடைந்த மற்ற குழந்தைகளையும் சைகோனில் (இன்று ஹோசிமின் நகரம்) உள்ள பர்ஸ்கி மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தார். அவரைச் சோதித்த மருத்துவர்கள் கிம் புக்கின் தீக்காயங்கள் மோசமாக உள் ளதால் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று கூறினர். ஆனால் 14 மாதங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அக் கால கட்டத்தில் அவருக்கு 17 அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன. அதற் குப்பின் கிம் புக் வீடு திரும்பினார். சை கோன் வீழ்ச்சி அடைந்தபின் நிக் உட் வியட்நாமிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுவரை அவர் கிம் புக்கை அடிக்கடி சென்று பார்த்துவந்தார்.
கொடிய நாபாம்
நாப்தனிக் அமிலம், பால்ம்டிக் அமிலம் ஆகிய இரு அமிலங்களின் கலவை இது. வெல்லப்பாகு போன்று இறுகக்கூடிய தன்மை உடையது. இதை பெட்ரோலியம் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் களில் கலந்து பயன்படுத்துவார்கள். காலாட்படை, ஆயுத வாகனங்கள் ஆகிய வற்றில் பயன்படுத்தப்படும் தீயெறி சாத னங்கள் மூலமும் விமானங்கள் மூலமும் நாபாம் குண்டுகள் வீசப்படும்.வீசியெறியப்பட்டவுடன் நாபாம் குண் டுகள், கலவையில் உள்ள தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக பளீரென்று தீப் பிடித்துவிடும். சுற்றிலும் காற்றில் உள்ள பிராண வாயுவை உட்கொண்டு கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக் சைடை உற்பத்தி செய்யக்கூடியது.இக்குண்டுகளை அமெரிக்கா இரண் டாவது உலகப் போரில் சோதித்துப் பார்த் தது. வியட்நாம் போரிலும் கொரியப் போரி லும் இதை அமெரிக்கா முழு வீச்சுடன் பயன்படுத்தியது. “தண்ணீர் கொதிக்க 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். நாபாம் குண்டுகள் 800 டிகிரி முதல் 1300 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடியவை’’ என்று கிம் புக் கூறு கிறார். ஒரு விமானத்தில் இருந்து வீசப் படும் நாபாம் குண்டு 2100 ச.மீ பரப்பளவு நிலத்தை நாசப்படுத்தும். நாபாம் கலவை மனித உடலில் தெறித்தவுடன் உடம்பே எரிவது போல் அனல்தகிக்கும். ஜெல் போன்ற அது உடலில் ஒட்டிக்கொள்ளும். அதை உட லில் இருந்து அகற்ற வழிமுறைகள் இல்லை. அதை எடுக்க முயன்றால் சதையையும் பிய்த்துக் கொண்டு வரும். அதை அகற்ற கையையும் பயன்படுத்த முடியாது. உடல் எரிகிறதே என்று தண் ணீரில் குதிக்கவும் முடியாது. நாபாமில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் தண்ணீரில் எரி யக்கூடியது. பெட்ரோலில் அது எரியாது. எனவே நாபாம் கலவையில் செயலற்று இருக்கும் பாஸ்பரஸ் தண்ணீர் பட்டவுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கும். ஏகாதிபத் தியத்தின் கொடுமையை என்னவென்று கூறுவது?1965 முதல் 1969 வரை, போபால் விஷவாயு புகழ் டௌ கெமிக்கல்ஸ் நிறு வனம் அமெரிக்காவில் நாபாமைத் தயா ரித்து வந்தது. வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் அமெரிக்காவில் வேரூன்றிய வுடன், டௌ நிறுவன ஊழியர்கள் நாபாம் ஆயுதத் தயாரிப்பை புறக்கணித்தனர். குறிப்பிட்ட மரபு வழி ஆயுத ஒழிப்பு சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்கா, மாநாட்டில் தயாரான ஐந்து சாசனங்களுக் கும் பின் ஒப்புதல் அளிக்க இன்றுவரை மறுத்து வருகிறது. சாசனங்களில் குறிப் பிட்டுள்ள ஆயுதங்களில் நாப்தாவும் ஒன்று.
வியட்நாம்
யுத்தம்இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி படைகள் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரான்ஸ் மிகவும் பாதிக்கப் பட்டது. இந்தோ சீனாவில் இருந்த பிரெஞ்சு காலனிகளை அதனால் மேலா திக்கம் செய்ய இயலவில்லை. வியட்நா மில் ஹோசிமின் தலைமையில் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் விளங்கியது. வியட்நாமில் கம்யூனிசம் பரவுவதை விரும்பாத நேச நாடுகள் அதை இரண்டாகப் பிரிக்க முடிவு செய் தன. வட வியட்நாம் ஹோசிமின் தலை மையிலான ஆட்சியின் கீழும், தெற்கு வியட்நாமை பிரான்சின் கட்டுப்பாட் டிலும் வைக்க ஜெனீவா மாநாடு முடிவு செய்தது.பிரான்சின் இயலாமை காரணமாக அமெரிக்கா தென் வியட்நாமில் தன் படைகளை இறக்கியது. ஜெனீவா மாநாடு முன்மொழிந்த பொதுத்தேர்தல் நடை பெறவில்லை. கம்யூனிசத்தைக் கட்டுப் படுத்தல் என்று கூறிக்கொண்டு வியட் நாமில் அமெரிக்கா படைகளை மும்மடங் காகக் குவித்தது. வியட்நாமை ஒன்றி ணைக்கும் முயற்சியில் வட வியட்நாம் மரபு ரீதியான போரில் இறங்கியது. தென் வியட்நாமில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு படைகள் கொரில்லா போர் முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமர்புரிந்தன. அமெரிக்கா மரபு ரீதியான போரை நடத்தாமல் ரசாயனப் போரை நடத்தியது. மக்களை அழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி பெருமளவில் மக்களைக் கொன்று குவித் தது. வியட்நாம் மக்களின் தீரமிகு போராட் டத்தால் ஏகாதிபத்தியம் தோற்று வெளி யேறியது.ஹோசிமின் தலைமையில் வடவியட் நாம் படைகள் தென் வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளை விரட்டின. 1975ம் ஆண்டில் சைகோன் வீழ்ச்சியுடன் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வியட் நாம் மீண்டும் ஒன்றிணைந்த நாடாக மாறியது.
நல்லெண்ணத் தூதர்
தற்போது 49 வயதாகும் கிம் புக் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். கியூபாவில் மருத் துவம் படித்த கிம் புக் தன்னுடன் படித்த புயி ஹூய் டோவான் என்பவரை மணந்து கொண்டு சிறப்பாக வாழ்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூது வராக கிம் புக் நியமிக்கப்பட்டுள்ளார்.வியட்நாமின் போராட்ட வாழ்க்கைக்கு இணையானது கிம் புக் வாழ்க்கை. கிம் புக்கின் வேதனைகளும் வலியும் அவ ருடைய துணிச்சலான மறுவாழ்வும் வியட் நாம் மக்களின் தீரத்தையும் தியாகத்தை யும் இன்றைய வளத்தையும் பிரதிபலிக் கின்றன.

Leave A Reply

%d bloggers like this: