தஞ்சாவூர், ஜூன் 7-இடைக்கால ஊதிய உயர்வு கேட்டு கும்ப கோணத்தில் எவர்சில்வர் பாத்திரத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 3ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட் டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.கும்பகோணம் நகரம் மாதுளம் பேட்டை, அன் னலக்ரஹாரம் பேட்டைத் தெரு, தாராசுரம் உள்பட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட எவர்சில்வர் பாத்திர தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நேரடியாக 2 ஆயிரம் தொழி லாளர்களும், மறைமுகமாக 3 ஆயிரம் தொழிலாளர் களும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். நாள் ஒன்றிற்கு ரூ.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.இந்த தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வுக்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் போடப்படு கிறது. அதன்படி 2009ம் ஆண்டு ஒப்பந்தம் போடப் பட்டது. தற்போது 2012 நவம்பரில் மீண்டும் போட வேண்டும். இந்த நிலையில் விலைவாசி உயர்வு காரண மாக தொழிலாளர்கள் இடைக்கால ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.இதுதொடர்பாக தொழி லாளர்களுக்கும், உற்பத்தி யாளர்களுக்கும் இடையே ஜூன் 6 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, அண்ணா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் முடிவு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொழிலா ளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.