சென்னை, ஜூன் 7-தென் மாநிலங்களுக்கு இடையே குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல் லும் பாதை அமைப்பதற் கான திட்டத்துக்காக விவ சாய நிலம் கையகப்படுத் தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன் றத்தில் கோவை மாவட்டம், கல் லான் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆர். மோகன பாலசுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவில் கூறிருப்பதாவது: கொச்சி பெங்களூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதற் கான பாதை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநி லங்கள் வழியே அமைக் கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங்கள் வழியே இந்தப் பாதை அமைக் கப்பட இருக்கிறது.இந்தப் பாதையை அமைப் பதற் காக எனக்குச் சொந்த மான விவசாய நிலம் உள் பட பல விவசாய நிலங் களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே விவசாய நிலங்கள் குறைவுபட்டு வரும் சூழ்நிலையில், விவ சாய நிலத்தை விட்டுவிட்டு வேறு நிலங்கள் வழியாக பாதை ஏற்படுத்தலாம். அந்த வகையில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை அமல் படுத்தும்படி, கெயில் இந் தியா நிறுவனத்திடம் கோரிக்கை மனு கொடுத் தோம்.அதோடு விவசாயி களுக்கு ஏற்படும் பாதிப்பை விளக்கியும், எதிர்ப்பை எழுத்துபூர்வமாக தெரி வித்தும் கெயில் இந்தியா நிறுவனத்துக்கு மனு கொடுக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை அவர்கள் நடத்தினர்.ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்து களை அந்த நிறுவனம் கேட்க வில்லை. பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயியையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த வேண் டும் என்ற கோரிக்கை வைத் தோம். அதையும் அந்த நிறு வனம் ஏற்கவில்லை.இந்த சூழ்நிலையில் எங் களுடைய எதிர்ப்புகளை நிராகரித்துவிட்டு விவசாய நிலங்களை கையகப்படுத் தும் பணியை தொடர்வ தற்கு கடந்த மார்ச் 26 ந் தேதி கெயில் இந்தியா நிறுவனம் முடிவு செய்துவிட்டது. சட் டப்படியான நடைமுறை களைப் பின்பற்றாமல் கெயில் இந்தியா நிறுவனம் இந்த முடிவை மேற்கொள்ள உள்ளது.எனவே அதை அமல் படுத்த தடை விதிக்க வேண் டும். பாதிக்கப்பட்ட விவ சாயிகளை அழைத்து மீண் டும் பொது விசாரணை நடத்த உத்தரவிட வேண் டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.இந்த மனுவை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசா ரித்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கெயில் இந்தியா நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: