திருச்சிராப்பள்ளி, ஜூன் 7-திருச்சி மாவட்டத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் இவ் வாண்டு முதல் செயல்படுத் தப்பட உள்ளது.இதையொட்டி மாவட்ட அளவிலான முதன்மை பயிற்றுநர்களை புதிதாக தேர்வு செய்யும் பொருட்டு இம்மாவட்டத் தில் உள்ள மகளிர் திட்டம் குறித்து 5 முதல் 8 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள், பிரபல தொண்டு நிறுவன பயிற்றுநர்கள், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித் துறை யினை சார்ந்த உதவி இயக் குநர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற் றும் முன்னாள் பயிற்றுநர் அல்லது புதுவாழ்வு திட்ட முன்னாள் பணியாளர்கள் 10.6.12க்குள் விண்ணப்பிக் கலாம்.ஏற்கெனவே, மகளிர் திட்டத்தின் கீழ் பணியாற் றும் மாவட்ட அளவிலான முதன்மை பயிற்றுநர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.முதுநிலை பட்டப் படிப்பு, இளங்கலை பட் டப்படிப்பு தகுதி உள்ள மகளிர் திட்டம் குறித்த அனுபவங்கள், எழுத்து தேர்வு, குழுவிவாதம் மற்றும் நுண்கற்பித்தல் திறன் ஆகிய மதிப்பீட்டு களின் அடிப்படையில் பயிற்றுநர்கள் தேர்ந்தெ டுக்கப்படுவர்.நேர்காணல் 12.6.12 முற் பகல் 11 மணிக்கு, “எஸ்ஜி எஸ்ஒய் பயிற்சி மைய கட் டிடம், மாவட்ட ஆட்சியர கம், திருச்சிராப்பள்ளி”யில் நடைபெறும்.மேலும் கூடுதல் விபரங் களை மாவட்ட ஆட்சிய ரக வளாகத்தில் உள்ள மக ளிர் திட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளி தரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: