மெரிடா, ஜூன் 7-உலகளவில் விரிவ டைந்து வரும் முதலாளித்து வத்திற்கு எதிரான போராட் டத்தை ஒற்றுமையுடன் முன்னெடுத்துச் செல்லும் வகையில் வெனிசுலாவில் புரட்சிகர மக்கள் கூட்டணி (ஏபிஆர்) சார்பில் காரகாஸ் நகரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி வெனி சுலாவில் அதிகாரத்துவத் தை நிராகரித்து அடித்தள சக்தியை ஊக்குவிக்கும் புரட்சியை குறிக்கோளாக கொண்டிருந்தது. அதனடிப் படையில் வெனிசுலா அதிபர் சாவேசுக்கு ஆதரவு தெரிவித்தும், முதலாளித்து வத்திற்கு எதிரான போராட் டத்தை ஒற்றுமையுடன் முன்னெடுத்து செல்வோம் என்றும் பேரணியில் பங்கேற்றோர் தெரிவித் தனர். மேலும் உலக அள வில் நடைபெற்று வரும் முத லாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தங்க ளது ஆதரவு எப்போதும் உண்டு, இந்த போராட்டத் தை ஒற்றுமையுடன் தொட ருவோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் கைப் பற்றுவோம் போராட்டக் குழுவினருக்கும், ஸ்பெயி னில் பல்வேறு அமைப்பு கள் இணைந்து உருவாக்கி யிருக்கும் ‘இன்டிக்னாட்ஸ்‘ போராட்டக்குழுவினரின் போராட்டத்திற்கும் பேர ணியில் ஆதரவு தெரிவிக்கப் பட்டது.
இந்த புரட்சிகர மக்கள் கூட்டணி வெனிசுலாவில் உள்ள பல்வேறு அமைப்பு களை ஒருங்கிணைத்து கூட்டு போராட்டக்குழுக் கான மேடையை உருவாக்கி யிருக்கின்றனர். இந்த அமைப்பில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர் களும் முதலாளித்துவத் திற்கு எதிரான ஒரே நோக் கத்தின் கீழ் செயல்பட்டு வரு கின்றனர். மேலும் வேலைத் திட்டங்கள் குறித்து ஜன நாயக பூர்வமாக விவாதித்து ஒவ்வொரு முடிவும் எடுக் கப்படுகிறது. அதன் படி இந்த அமைப்பு பொதுவான போராட்டத் திற்கு திட்டமிட்டு அதற் காக மக்களை திரட்டுவது, தெருமுனைப்பிரச்சாரம் மற்றும் ஊடக பிரச்சாரத் தின் மூலம் தங்களது திட் டங்களை பரப்பி வருகிறது. மேலும் திட்டங்கள் குறித்த விவாதத்தை நடத்துவது, கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி அதன் மூலம் தங்களை இவ் வமைப்பினர் தயார்ப்படுத்தி கொள்கின்றனர். மேலும் கீழ்மட்ட அளவிலான தக வல் தொடர்பின் மூலம் அச் சுறுத்தல்களை தகர்த்தெறி தல், வன்முறை சமயங்களில் அமைப்பே முன்முயற்சி யோடு மக்களை பாதுகாப் பது, நாசவேலைகளை முறி யடிப்பது, உணவு பற்றாக் குறையை சரி செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் சாவேஸை வெற்றி பெறச்செய்வதென்றும், அதற்கான வேலைகளை செய்வதென்றும் இந்த புரட்சிகர மக்கள் கூட்டணி முடிவெடுத்திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.