சென்னை, ஜூன் 7 –
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்க வில் உள்ள இலினோஸ் பல்கலை கழக குடும்ப மற்றும் நுகர்வோர் அறிவியல் துறை தலைவரும் பேராசிரிய ருமான ஜேம்ஸ் பெயிண்ட்டர் புதிய ஆலோசனைகளை கூறியுள்ளார்.இதன்படி எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சாப் பிடுங்கள். ஆனால் எதை எப்போது எந்த அளவு சாப் பிடவேண்டுமோ அந்த அளவு சாப்பிட்டால் போதும் என்கிறார். இதற்காக அவர் அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார். ஓடு உள்ள பிஸ்தா பருப்பை விட ஓடு நீக்கப்பட்ட பிஸ்தா பருப்பை மனிதர்களுக்கு அளித்தபோது அதை அவர்கள் குறைந்த நேரத்திலேயே அதிக பருப்புகளை உட்கொண் டார்கள்.
எனவே எதை எப்படி சாப்பிடவேண்டும் என் பதை அறிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர். பழங்களை ஜூஸ் செய்து அருந்தினால் அதிக சத்து கிடைக்கும் ஆனால் அதனால் உடலுக்கு தேவையான பல நார்ச்சத்துக்களை இழக்கநேரிடுகிறது.எனவே பழங்களை அப்படியை கடித்து சாப்பிடவேண்டும் என்று அவர் ஆலோசனை கூறுகிறார். மேலும் பழங்களை துண்டு துண்டாக நறுக்கவேண்டாம் என்றும் நன்றாக கழுவி விட்டு அப்படியே சாப்பிடவேண்டும் என்றும் ஜேம்ஸ் கூறுகிறார்.பசி எடுத்தவுடன் சாப்பிடுங்கள். சாப்பிடவேண்டும் என்பதறாக சாப்பிடாதீர்கள் என்ற ஆலோசனைகளை யும் அவர் தருகிறார்.இந்த ஆலோசனைகளை பரிசோ தித்து பார்த்தபோது சரியாக இருந்ததாக பிரபல ஊட் டச்சத்து நிபுணர் டாக்டர் கீட்டுஅமராணி கூறியுள் ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.