நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படப்பிடிப்பில் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சில டிப்ஸ் கொடுப்பார், நடிகை வடிவுக்கரசிக்கு ஒரு டிப்ஸ் தந்தார்.‘வா கண்ணா வா’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் ஷெட்டில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். என்னுடைய நடை எப்பவுமே ஆம்பளை நடை மாதிரி இருக்கும். இதை கவனித்த சிவாஜி, ஏய், இது என்ன நடையா?னு கேட்டார்.“என்னடா நாம நல்லாத்தானே நடக்கிறோம், அப்புறம் ஏன் நடையானு கேட்கிறார்” என்று நினைத்தபடி அவர்கிட்டே போனேன்.“பொண்ணுன்னா நடையிலே ஒரு நளினம் இருக்கணும். நீ என்ன இப்படி நடக்குறே…” என்று சொல்லிவிட்டு, தலை யிலே புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒரு கோடு கிழித்து அதில் நடந்து காட்டி, இப்படி நடந்து பழகுன்னு சொல்லி விட்டார். நானும் அப்படியே செய்யறேன்னு தலையாட்டி வந்தேன்.அப்பதான் சினிமாவுக்கென்று ஒரு தனி நடை இருக்கிறது என்பதே எனக்கு தெரிந்தது. அவர் சொன்ன மாதிரி நடக்கறது நளினமா அழகாயிருக்கலாம். ஆனால் நான் ஆம்பள மாதிரி நடந்து பழகிட்டேனே… அதனாலே அன்னியிலிருந்து அவர் ஷெட்டில் இருக்கும்போது மட்டும் நளினமா நடந்து போவேன், வருவேன். அவர் இல்லாதபோது பழையபடி என் இஷ்டத்துக்கு நடந்து போவேன், என்கிறார் வடிவுக்கரசி.

Leave A Reply

%d bloggers like this: