வந்தவாசி, ஜூன் 7-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வந்தவாசி கிளை சார் பாக திண்ணை 100 கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி வந்தவாசி ஆதி.சுரேஷ்-செந் தில் நினைவரங்கில் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு வரவேற்புக் குழுத்தலைவர் அ.ஜ.இஷாக் தலைமை தாங்கினார். வர வேற்புக் குழுச் செயலாளர் பூங்குயில் சிவகுமார் அனை வரையும் வரவேற்றுப் பேசி னார்.இரா.சிவகுமார், என். ராதாகிருஷ்ணன், கி.உதய குமார், பி. ரஹமத்துல்லாஹ் முன்னிலை வகித்தனர். எழுத் தாளர் முகில் தொடக்க உரை யாற்றினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான என். நன் மாறன் சிறப்புரையாற் றினார்.இசைப்பயணத்தில் 25 வருடங்களை நிறைவு செய் துள்ள வைகறை இசைக் குழுவிற்கு திண்ணை 100 சார் பில் பாராட்டு தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.கருணா பேசினார்.கவிஞர்கள் ஜீவிதன், நா.வே. அருள், சாருமா, அதியன், ம.மகாலட்சுமி கவிதை வாசித்த னர்.
தெள் ளாறு ஜோதி நிதியுதவிப் பள்ளி 100மாணவர்கள் சேர்ந்திசை பாடலை பாடி னார். மாவட்ட தலைவர் மு.பாலாஜி,மாவட்டச் செயலாளர் கவிஞர் ஆரிசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திண்டுக்கல் சக்தி கலைக் குழுவின் தப்பாட்டம், கரகாட் டம், புதுகை பூபாளம் கலைக் குழுவின் நையாண்டி நிகழ்ச்சி புதுவை சப்தர அஸ்மி கலைக்குழுவின் முற்போக் குப் பாடல்கள்,வைகறை இசைக்குழுவின் பாடல் நிகழ்ச்சி மற்றும் சென்னை கலைக்குழுவினரின் இடம் கொக்கரிப்பு ஆகிய இரு நாடகங்கள் என பல் வேறு நிகழ்வுகள் பெரும் மக்கள் திரளுடன் நடை பெற்றன. முன்னதாக, ஐந்து கண் பாலத்தில் இருந்து கோட்டைமூலை வரை பாப்பம்பாடி ஜமா வின் அதிரடி மேளத்தோடு நடை பெற்றது. முடிவில் வர வேற்புக்குழு பொருளாளர் எ.பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.நிகழ்வில் தமுஎகச நிர்வாகிகள் தமிழ்ராசா, பாரதிமோகன், என்.ஆர்.தமி ழரசு, க.அஸ்கர்அலி, சி. ரவி, ஆ. மெசியா பீட்டர். பா. திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: