விஸ்கோன்ஸின், ஜூன் 7-அமெரிக்காவின் விஸ் கோன்ஸின் மாகாணத்தில் நடைபெற்ற கவர்னருக்கான மறுதேர்தலில் முதல்முறை யாக குடியரசுக் கட்சி வேட் பாளர் ஸ்காட் வால்கர் வெற்றிபெற்றுள்ளார்.கடந்த 1988ம் ஆண்டு முதல் இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களே கவர்னராக வெற்றிபெற்றுள்ளனர். இந்த ஆண்டு முதன்முறை யாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் தேர்வு பெற்றுள் ளார். இந்த மறுதேர்தலில் ஸ்காட் வால்கர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த் துப் போட்டியிட்ட டாம் பேர்ரெட் 46 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வி யடைந்தார். சுயேச்சை வேட்பாளர் ஒரு சதவிகித வாக்குகளைப் பெற்றார். விஸ்கோன்ஸின் மாகாணம் அமெரிக்காவின் ஜனாதிப தியை நிர்ணயிப்பதில் முக் கிய பங்கு வகிக்கிறது. கடந்த முறை நடைபெற்ற ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிட்ட ஒபாமா இப்பகுதியி லிருந்து 14 சதவிகித வாக்கு களைப் பெற்றார்.இதனிடையே வரும் நவம்பர் மாதம் அமெரிக்கா வில் நடைபெறவுள்ள ஜனா திபதி தேர்தலில் ஒபாமா விற்கு எதிராக போட்டியி டும் குடியரசுக் கட்சி வேட் பாளர் மிட் ரோம்னி ஸ்காட் டிற்கு பாராட்டு தெரிவித் தார்.
பின்னர் அவர் கூறுகை யில், இந்த சாதனை வெற்றி விஸ்கோன்ஸின் எல்லை யைத் தாண்டி ஒலிக்கும். மேலும், தொழில் முதலாளி களுக்கு வாரி வழங்கப்படும் மக்களின் வரிப்பணத்திற்கு எதிராக கேள்வி கேட்கும் உரிமையும், போராடும் உரி மையும் குடிமக்களுக்கும், வரி செலுத்துவோருக்கும் கிடைத்திருக்கிறது என் றார்.பின்னர் பேசிய ஸ்காட் வால்கர், மக்களுக்குத் தேவையான உறுதியான மற்றும் சிறந்த முடிவுகளை எடுக்கும் தலைவர்களையே மக்கள் விரும்புகிறார்கள் எனும் செய்தியை விஸ் கோன்ஸின் தேர்தல் முடிவு, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு உரக்கச் சொல் கிறது என்றார்.அமெரிக்க வரலாற்றி லேயே கவர்னருக்கான மறுதேர்தல் நடப்பது இது மூன்றாவது முறையாகும். அதேபோல், முதல்முறை யாக முதல் தேர்தலில் வெற்றிபெற்றவரே மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம், பொதுத் துறையில் ஸ்காட் மேற் கொண்டு வரும் சீர் திருத்தங் களே என அரசியல் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஜனாதி பதி தேர்தல் விரைவில் வரவிருக்கின்ற சூழ்நிலை யில், அந்நாட்டில் குடியர சுக் கட்சி வேட்பாளர்களுக் கான ஆதரவு மக்களி டையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை வென்ற பணம்
இத்தேர்தலில் வால்கர் வெற்றி பெறுவதற்காக ஒரு ஓட்டிற்கு 23 டாலரை செலவிட்டுள்ளார். பேர் ரெட் ஒரு ஓட்டுக்கு 3.47 டாலரை செலவழித் துள்ளார். விஸ்கோன்ஸில் நடைபெற்ற பிரச்சாரத் திற்கான மொத்தச் செலவு 34. 5 மில்லியன் டால ராகும். அதில் வால்கர் மட்டும் 30.5 மில்லியன் டாலர் களை செலவு செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பேர்ரெட் வெறும் 4 மில்லியன் டாலரை செலவு செய்துள்ளார். இதன் மூலம், வால்கர் 13,16,989 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர் வேட்பாளரான பேர்ரெட் 11,45,190 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதுதவிர, வால்கருக்கு ஆதரவாக மில்லினியர்கள் மற்றும் பெரும் வியாபாரிகள், டிவி, ரேடியோ மற்றும் இணையதளம் மூலம் விளம்பரங்கள் மேற்கொண் டனர். இச்செலவுகளையும் சேர்த்தால், பிரச்சார செலவு இரண்டு மடங்கு வரை செல்லும் என கூறு கின்றனர். இறுதியில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது என கருத்து தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.