மதுரை, ஜூன் 6- உசிலம்பட்டி அருகே உள்ள பெரிய கட்டளை கிராமத்தில் மூன்று பேரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளில் இருந்த தாலிக்கொடி, தாலிச் செயின், தங்கமாலை, தங்க அட்டியல், தோடு, மோதி ரம் என அனைத்து நகை களையும் கொள்ளையடித் துச் சென்றுள்ளனர்.பெரியகட்டளை கிரா மத்தைச் சேர்ந்த சின்னச் சாமி மகன் ரவீந்திரன் (50), இவரது வீட்டின் அருகில் வசிக்கும் செல்ல ஒச்சு மகன் ராமசாமி (48), பொன் னையா மகன் பால் சாமி (60) ஆகியோர் தங்களது குடும் பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்ட னர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத் அடையாளம் தெரியாத நபர்கள் ரவீந்தி ரன் வீட்டில் நுழைந்து 18 பவுன் நகையை கொள்ளை டித்துள்ளனர். இவரது வீட்டிற்கு அரு கில் உள்ள ராமசாமியின் வீட்டில் நுழைந்து 25 பவு னுக்கும் அதிகமான நகை யையும், பால்ச்சாமி என்பவ ரது வீட்டினுள் புகுந்து 3 பவுன் நகை 17 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை யும் கொள்ளையடித்து விட்டு தப்பினர். ரவீந்திரன், ராமசாமி, பால்ச்சாமி ஆகியோர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டிலிருந்த நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: