நமது சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும், ஒரு சிலர் இல்லையென்றும் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையில், இன்னும் 11 வருடத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து துணிச்சலாக தனியார் விண்வெளி வீரர்கள் நான்குபேரைக் கொண்ட ஒரு குழுவை ஒரு வழிப் பயணமாக அனுப்பிவைக்கப்பட உள்ளது. அந்த குழுவிற்கு பெயர் மார்ஸ் ஒன் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடங்கியவர் டச்சு தொழிலதிபரும், முன்பு மாற்று ஆற்றல் நிறுவனத்தின் தலைவருமான பஸ் லேன்ட்ஸ்ட்ராப் ஆவார். செவ்வாய் கிரகத்தை அடையவேண்டும் எனும் துணிச்சலான பயணத்திற்கு தயாராகிவரும் பட்டியலில் மார்ஸ் ஒன் உறுதியாக முன்னணியில் உள்ளது. இந்த பயணத்தின் முதல் படியாக 2016இல் செவ்வாய் கிரகத்திற்கு தகவல் தொடர்பு செயற்கைகோளை அனுப்பும்.
அதற்கு பிறகு இரண்டாவதாக, தூசு நிறைந்த செவ்வாய் கிரகத்தில் ஒரு நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து காலனி அமைப்பதற்கு, ரெட் ப்ளானட் ரோவர் எனும் ரோபோவை அனுப்ப உள்ளது. மூன்றாவதாக, காலனி அமைத்து அதில் வாழ்வதற்கான உள்கட்டமைப்புகளும், ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் உருவாக்கித் தரக்கூடிய மெஷின்களும், சோலார் பேனல்களும் அனுப்பிவைக்கப்பட உள்ளது. அதற்குபிறகு, 2022 ஆம் வருடத்தில் செப்டம்பர் 14 ந்தேதி உலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மார்ஸ் ஒன் எனும் நான்கு வின்வெளி வீரர்கள் அடங்கிய முதல் குழுவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.இந்த புதிய காலனி சகாப்த பயணம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 10 மாதங்கள் ஆகும். அதற்கு அவர்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ள அறைகளில் ஒருவரை ஒருவர் துன்புறுத்தாமல் அச்சூழலுக்கு ஏற்ற தங்களை தயார்படுத்திக் கொண்டு எவ்வாறு மனிதன் அங்கு வாழ முடியும் என ஆராய்வார்கள். இவர்களை தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அடுத்தடுத்து துணிச்சலான விண் வெளிவீரர்கள் தொடர்ந்து செவ்வாய் கிரக காலனிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் யாரும் மீண்டும் பூமிக்கு திரும்பாமல் செவ்வாய்கிரக வாசிகளாகவே வாழ்வார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு நீண்ட காலத்திற்கு நிரந்தரமாக அமையப்போகும் வலிநிறைந்த துணிச்சல் மிக்க செயல்திட்டம். இதற்கு “ஊடக விந்தை” தான் நிதியளிக்கும் என்று டேண்ட் ஸ்ட்ராப் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: