பெய்ஜிங், ஜூன் 6 -ரஷ்ய அணு உலைகளை அமைத் தல், வர்த்தக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு உள்பட, 10 முக்கிய ஒப்பந்தங்களில் சீனாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டன.சீனா – ரஷ்யாவின் உறவு உலக நாடு களுக்கு பலனளிக்கும். அதே போன்று இரு நாடுகளும் பயன்பெறும் என சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ தெரி வித்தார். அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு தயாராகும் வகையில் இருநாடுகளும் ஒப்பந்தத்திற்கு தயாரா கின்றன என்ற யூகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மேம் பாட்டு பணிகளுக்காகவே ஒப்பந்தங் கள் நிறைவேறி உள்ளன என ஹூ ஜிண்டாவோ திட்டவட்டமாக தெரி வித்துள்ளார். ஒருங்கிணைப்பு நிலைபாடு மற்றும் நட்புறவு மேம்பாடுகளில் சீனாவின், மிக நெருங்கிய கூட்டாளி ரஷ்யா ஆகும். இரு நாடுகளின் உறவு வலுப்பெற்றதாகவும் நேர்மறையாக வும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.ஹூ ஜிண்டாவோ ரஷ்யா ஜனாதி பதி விளாடிமிர் புடினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இருநாடுகள் இடையேயான ஒப்பந் தங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கையெழுத்தாகின.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உறுப்பினர் நாடுகளின் 12வது மாநாட்டுக்காக புடின் சீனா வந்துள்ளார். இந்த எஸ்.சி.ஓ. மாநாடு புத னன்று துவங்கியது. இதில் 6 உறுப் பினர் நாடுகள் உள்ளன.இந்த அமைப்பில் வலிமைமிக்க சீனா, ரஷ்யாவுடன், மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ் தான், தஜிகிஸ்தான், கிர்ஜிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மங்கோலியா, நாடுகள் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பை நேட்டோ பாணி ராணுவ கூட்டணியாக மாற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில் லை என சீனா தெரிவித்துள்ளது. ஹூ ஜிண்டாவோ – புடின் சந்திப்பின் போது 400 கோடி அமெரிக்க டாலர் முதலீடு நிதி உள்பட 10 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.சீனத் தலைவருடனான சந்திப்பு குறித்து புடின் கூறுகையில், வர்த்தக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள் ளன என்றார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தங் கள் குறித்து புடின் மேலும் கூறுகை யில், சீனாவில் 2 அணுமின் உலை களை ரஷ்யா அமைத்து வருகிறது. மின்சாரம், சுற்றுலா, எரிசக்தித்துறை களிலும் கூடுதல் ஒத்துழைப்புக்கு ஒப் பந்தங்கள் நிறைவேறி உள்ளன என்றார்.

Leave A Reply

%d bloggers like this: