கொல்கத்தா, ஜூன் 6-மேற்குவங்க மாநிலத் தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணா முல் காங்கிரசின் ஆதிக்கம் உள்ள ஹால்தியாவில் இடதுமுன்னணி மகத்தான வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி, கூப்பர் கேம்ப் நக ராட்சியை மீண்டும் வென் றுள்ளது.மேற்குவங்க மாநிலத் தில் ஞாயிற்றுக்கிழமை யன்று 6 உள்ளாட்சிகளுக் கான தேர்தல் நடைபெற் றது. இதில் அதிகாரபலத் தை பயன்படுத்தி, திரிணா முல் காங்கிரஸ் 4 உள்ளாட் சிகளில் வெற்றிபெற்றது. இருப்பினும் அந்த கட்சி தனது கோட்டை எனக் கூறிக்கொள்ளும் ஹால்தி யாவில் படுதோல்வி அடைந் தது. அங்கு இடதுமுன் னணி மகத்தான வெற்றி பெற்றது.புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஹால்தியா ஆகும். ஹால்தியாவில் கிடைத்த தோல்வியால் மம்தாவும் அவரது கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். 6 உள்ளாட்சிகளுக் கான தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளி யானது.
ஹால்தியாவில் தோல்வி யை சுமந்த திரிணாமுல் காங்கிரசுக்கு கூப்பர் கேம்ப் உள்ளாட்சி தேர்தலிலும் (நாடியா மாவட்டம்) பின்ன டைவு ஏற்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தனது கூட்டாளியாக உள்ள காங்கிரஸ் கட்சியிடம், திரி ணாமுல் தோற்றுப்போய் அவமானப்பட்டுள்ளது.திரிணாமுல் கட்சி 2008ம் ஆண்டு பஞ்சாயத் துத்தேர்தல் முதல் புர்வா மேதினிப்பூர் மாவட்டத் தில் ஒவ்வொரு தேர்தலி லும் வெற்றிபெற்றது. இந்தக் கட்சி 2009ம் ஆண்டு மக்கள வைத் தேர்தலிலும் 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இங்குள்ள 16 சட்டசபைத் தொகுதிகளி லும் திரிணாமுல் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் மம்தா ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே அவரது நிர் வாகத்தில் அதிருப்தி அடைந்த இந்த மாவட்டத் தின் மக்கள் இடதுமுன்ன ணியின் அருமையை உணர்ந்து இடதுசாரிகளின் கைகளில் வெற்றிக்கனியை தந்துள்ளனர்.ஹால்தியாவில் ஏற் பட்ட தோல்வியால் அதிர்ச்சி அடையவில்லை, அங்கு பெரிய வாக்கு வித்தியாசத் தில் தோல்வி அடையவில் லை என தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட் டர்ஜி கூறுகிறார். திரிணா முல் கட்சியின் பொதுச் செயலாளரும் ரயில்வே துறை அமைச்சருமான முகுல் ராயும் இதேபோன்று விளக்கம் அளித்துக் கொண் டிருக்கிறார். துர்காபூர் மாந கராட்சியில் திரிணாமுல் வென்றுள்ளது. ஜல்பய்குரி மாவட்டத்தில் உள்ள துப் குரி உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி வென்றுள் ளது. துர்காபூர் மாநகராட்சித் தேர்தலில் 1996ம் ஆண்டு முதல் இடதுமுன்னணி வெற்றிபெற்றது. தற்போது ஆளும் கட்சி அதிகா ரத்தால், அங்கு வெற்றியை இழந்து இருக்கிறது. அங்கு திரிணாமுல் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 29 ஆகவும், இடதுமுன்னணி கவுன் சிலர்கள் எண்ணிக்கை 11 ஆகவும் உள்ளது.தும்குரி உள்ளாட்சி தேர்தலில் 16 இடங்களில் 4 இடம் இடது முன்னணிக்கு கிடைத்தது. கூப்பர்ஸ் கேம்ப் உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் 11 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றி திரி ணா முல்லை கீழே தள்ளி யுள்ளது.
ஹால்தியா வெற்றி கட்சி மீது மக்கள் வைத்த நம்பிக் கைக்கான வெற்றி என சிபிஎம் தலைவரும் 3 முறை ஹால்தியா நகராட்சி தலை வராக இருந்தவருமான தம லிகா சேத் கூறினார். ஹால்தியாவில் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று திரி ணாமுல் குற்றச்சாட்டு கூறி யிருக்கிறது.ஹால்தியாவில் ஏற் பட்டதோல்வி பேரிடர் அல்ல என உள்ளூர் திரி ணாமுல் தலைவரும், எம்பி யுமான சுபெந்து அதிகாரி கூறியதுடன் நிற்காமல், தங்க ளது வாக்குகளை இடது முன்னணிக்கு திருப்பியது டன் அல்லாமல், திரிணா முல் குறித்து தவறான பிரச் சாரமும் மேற்கொண்டது என கூட்டணி காங்கிரசை விமர்சித்தார்.ஹால்தியாவின் 26 வார்டுகளில் 15 வார்டுகளை இடதுமுன்னணி கைப்பற் றியது. தமலிகா சேத், நந்தி கிராமம் மற்றும் அருகாமை பகுதிகளில் நிலம் கையகப் படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை யை தூண்டியதாக பொய் யான குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: