நாகப்பட்டினம், ஜூன் 6 -வானில் அரிதாக நிக ழும், வெள்ளிக்கோள், சூரி யனுக்கும் பூமிக்கும் இடையே நகரும் அற்புதக் காட்சியை புதன்கிழமை காலை, நாகைப் புதிய கடற் கரையில் உரிய கருப்புக் கண்ணாடி மூலம், ஏராள மான பள்ளி மாணவ- மாண வியரும் பொதுமக்களும் கண்டுகளித்தனர்.மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மாணவ- மாண வியருடன் வெள்ளி நகர்வுக் காட்சியைக் கண்டு ரசித் தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாகை மாவட்டக் குழு இதற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தது.குறிச்சி ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லா சிரியர் இரா.பாலு, அப் பள்ளி மாணவ-மாணவி யரை அதிகாலையிலேயே நாகைப் புதிய கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தார். அவர்களுடன், மாவட்ட ஆட்சியர் வெள்ளிக் கிரகம் நகர்வுக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கருப்புக் கண் ணாடியைப் பலருக்கும் வழங்கி உதவியது.

Leave A Reply

%d bloggers like this: