சென்னை, ஜூன் 6 -வீடுகளுக்கு தீ வைக்கப் பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறு முகம் புதனன்று காலை புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.திமுக தலைவர் கருணாநிதி வீரபாண்டி ஆறுமுகத்தை புழல் சிறைக்கு சென்று சந் திப்பதாக இருந்தார். இந்நிலை யில் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றப்பட் டுள்ளதை கருணாநிதி கண்டித் துள்ளார். இதய நோயாளியான ஆறுமுகத்தை போலீசார் அலைக்கழிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதலின்பேரில் அங்கம் மாள் காலனிக்குள் புகுந்து குடி சைகளை அடித்து தரைமட்ட மாக்கியதோடு, தீ வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த வழக்கில் வீர பாண்டி ஆறுமுகம் கைது செய் யப்பட்டார். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை புழல் சிறைக்கு மாற்றினர். பின் னர் திடீரென்று வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: