சென்னை, ஜூன் 6-ரயிலில் பெட்ரோலு டன் வாகனத்தை அனுப்பி னால் 3 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித் துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ரயில்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ஆபத்தான பொருட் களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை யும் மீறி பெட்ரோல், மண் ணெண்ணெய்போன்றஆபத் தான பொருட்களை எடுத் துச் செல்வது ரயில்வே சட் டத்தின்படி தண்டனைக் குரிய குற்றமாகும்.ரயில்களில் மோட்டார் சைக்கிள்களை அனுப்பும் போது பெட்ரோல் டேங் கில் பெட்ரோல் இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது நடை முறையாகும். எனவே, பய ணிகள் தங்கள் வாகனங் களை வெளியூர் அனுப்புவ தற்காக கொண்டு வரும் போது பெட்ரோல் டேங்கை காலியாக வைத்திருப்பதை உறுதி செய்யவேண்டும். இதை பின்பற்றாதவர்கள் மீது ரயில்வே சட்டம் 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டு ரூ.1,000 அபராதமோ அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ விதிக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.