திருவாரூர், ஜூன் 6-மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தை (100 நாள் வேலை) திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக அமல்படுத்தக் கோரியும் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும் வரும் ஜூன் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.திருவாரூரில் 100 நாள் வேலைத்திட்ட அமலாக் கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழ மையன்று விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.திருஞானம் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் மேற் கண்ட முடிவு எடுக்கப்பட் டது. சங்கத்தின் அகில இந் திய துணைத்தலைவர் எஸ். திருநாவுக்கரசு கலந்து கொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள சட்டப் பூர்வமான உரிமைகள் குறித் தும் விவசாயத் தொழிலா ளர்களுக்கு கிடைக்க வேண் டிய பலன்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்து உரையாற்றினார்.
இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஐ.வி.நாக ராஜன் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஆர்.சாமியப்பன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து சங்கத்தின் முன் னணி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத் தில் 100 நாள் வேலைத்திட் டம் செயல்படும் முறைகள் குறித்து ஆய்வுகள் செய்ய வும் ஊழல் முறைகேடு களை தடுத்து நிறுத்தவும் விவசாயத்தொழிலாளர்களின் உரிமையை பெற்றுத்தரு வதற்கும் அமைப்புக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் கன்வீனராக கே.நட ராஜன் தேர்வு செய்யப்பட் டார். கூட்டத்தில் கீழ்க்கா ணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.கிராமப்புற மக்களின் வறுமையை, ஏழ்மையை ஓரளவு குறைக்கும் வகை யில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசின் போது இடதுசா ரிக் கட்சிகளின் நெருக்கடி யால் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட் டத்தை முறைகேடுகள் இல் லாமல் செயல்படுத்த வேண் டும். சட்டக்கூலியான 132 ரூபாயை குறைக்காமல் அனைத்து ஊராட்சிகளி லும் வழங்கிட வேண்டும். இத்திட்டத்தில் பணியாற் றுவதற்கு அடையாள அட்டை தருவதில் பல் வேறு குளறுபடிகள் நடை பெறுகின்றன. அனைவருக் கும் அட்டை வழங்கப்படு வதில்லை. எனவே பழைய அட்டை வைத்திருக்கக் கூடிய அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண் டும். கடப்பாரை, மண் வெட்டி, இரும்புச்சட்டி போன்ற உபகரணங்களை மானிய விலையில் தர வேண்டும். அடையாள அட்டைக் கான புகைப்படம் ஊராட் சியிலேயே எடுத்துத் தரப் பட வேண்டும் என்று விதி இருந்தும் அதை ஊராட்சி கள் அமல்படுத்துவதில்லை.
எனவே ஊராட்சிகளே அதற்கான புகைப்படத்தை தங்கள் சொந்தப் பொறுப் பில் எடுத்துத் தரவேண்டும். காலதாமதம் இல்லாமல் தூர்வாரும் பணியை துரி தமாக செயல்படுத்த வேண் டும். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு விவ சாயத் தொழிலாளர்களைக் கொண்டு, விவசாயப்பணி யை செய்து தர வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கன் வீனர் கே.நடராஜன் தலை மையில் விளமல் கல்பாலம் அருகிலிருந்து ஆயிரக்க ணக்கானோர் பேரணியாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜூன் 12ஆம் தேதி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: