மதுரை, ஜூன். 6- மதுரை அருகே லாரி ஒன்றின் மீது பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் பேருந்தின் நடத்துநர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செவ்வாயன்று இரவு அரசுப்பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை தூத் துக்குடியை சேர்ந்த ராஜேந் திரன் (52) ஓட்டிச் சென் றார். நடத்துநராக விஜயன் இருந்தார். பஸ்சில் ஏராள மான பயணிகள் இருந்தனர். புதனன்று அதி காலை 4.30 மணி அளவில் பேருந்து மதுரை மாவட்டம் திருமங் கலம் அருகே உள்ள கள் ளிக்குடி அருகே வந்து கொண்டிருந்தது.அப்போது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. எதிர் பாராதவிதமாக பேருந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந் தது. விபத்தில் திருப்பூர் வளையன்காடு சாமாண்டி புரம் பிவிசி நகரைச் சேர்ந்த சிவா மனைவி கிருஷ்ண வேணி(27), இவரது 4 வயது மகன் ஸ்ரீதரன், திருப்பூர் மங்களம் ரோடு செங்குந்த புரம் குமார் திருமணமண் டபம் அருகே வசிக்கும் குணசேகரன் மனைவி சாந்தி(35), திருநெல்வேலி மகாராஜபுரம் சரண்யாநக ரைச் சேர்ந்த செல்லமாடன் மகன் விஜயன்(55) ஆகி யோர் பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணி கள் காயமடைந்தனர். அவர்கள் மது ரை மற்றும் திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், துணை கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட் டனர்.

Leave A Reply

%d bloggers like this: