சென்னை, ஜூன் 6-போக்குவரத்து ஊழியர் களுக்கு 7 விழுக்காடு அக விலைப்படி (டி.ஏ.) உயர்த் தப்பட்டுள்ளது. அதற்கான தொகையை வழங்க முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட் டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில்இயங்கிவரும் 8போக்குவரத்துக் கழகங் களில் பணிபுரியும் அலுவ லர்கள், தொழில்நுட்ப பணி யாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் ஆகியோருக்கு வழங்கி வரும் அகவிலைப் படியை 2012ம் ஆண்டு ஜன வரி 1ம் தேதி முதல் 58 விழுக் காட்டிலிருந்து 65 விழுக்கா டாக உயர்த்தி வழங்க உத்தர விட்டுள்ளேன்.இந்த அகவிலைப்படி உயர்வுபோக்குவரத்துக்கழகங் களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக் கும் பொருந்தும். மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப் படி, நிலுவை இன்றி ரொக்க மாக 1.1.2012 முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்கு வரத்துக்கழகங்களுக்குகூடுத லாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 கோடியே 55 லட்சம் செல வாகும்.இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் போக்கு வரத்து கழகங்களில் பணிபுரி யும் ஒரு லட்சத்து 19 ஆயி ரத்து 764 பணியாளர்களும், 41 ஆயிரத்து 520 ஓய்வூ தியதாரர்கள் மற்றும் குடு ம்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: