லண்டன் பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் ஒரு இந்தியர் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற செய்தி கிடைத்தவுடன் இளைய வீரர் சரத் கயக் வாடுக்கு வழிவிட்டு ஆசிய பதக்க வீரர் பிரசந்தா கர்மாகர் விலகிவிட்டார்.குவாங்சௌ ஆசியப்போட்டிகளின் பாராலிம்பிக் பிரிவில் நீச்சல் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பிரசந்தா வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டிக்கு தகுதிபெறும் காலக்கெடு இன்னும் உள்ளது. சரத் கயக்வாடு பாராலிம்பிக் நீச்சலில் ஒலிம்பிக் தகுதி பெற்றுவிட்டார்.பிரசந்தா ஒலிம்பிக் தகுதியை இதுவரைபெறவில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தகுதிபெற முயன்ற பிரசந்தா தனது விலகலை அறிவித்துள்ளார். அர்ஜூனா விருது பெற்றுள்ள பிரசந்தா தன்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிடப்போவதாகவும் தனது முன்னுரிமை பற்றி தீர்மானிக்கப்போவதாகவும் கூறினார்.தான் காவல்துறையில் பணி தருவது குறித்து ஹரியானா அரசு தொடர்ந்து செயல்படவில்லை என்பதால் ஹரியானா முதல்வரைச் சந்திக்க முயலப்போவதாக அவர் சொ ன்னார்.

Leave A Reply