சென்னை, ஜூன் 6 –
அலவன்ஸ் மற்றும் இதர படிகளை மாற்றி அமைத்தல், நிறுத்தி வைக்கப் பட்ட சுற்றுலா படி, மருத் துவ படி ஆகியவற்றை மீண்டும் வழங்குதல், போனஸ் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து சென்னை புரசைவாக்கத்தி லுள்ள பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை அலுவலகம் முன் பாக தர்ணா நடைபெற்றது.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13 அன்று தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட் டவும் இந்த தர்ணா போராட்டத்தில் பிஎஸ் என்எல்இயு மாநில செய லாளர் கே.கோவிந்தராஜ், தலைவர் பி.சுப்ரமணியன், எஸ்என்இஏ தலைவர்கள் எச்.முத்து, சண்முக சுந்தர ராஜ் மற்றும் கே.வைத்திய நாதன் (ஏஐபிஎஸ்எல்இஏ), ஆறுமுகம் (எஸ்இடபிள் யுஏ), ஜெயவேலு (பிஎஸ்என் எல்இயு), விஜயகுமார் (டிஇ பியு) உள்ளிட்டோர் உரை யாற்றினர். ஆர்.அண்ணா மலை, சேகர், சிட்டிபாபு, சத் தியமூர்த்தி, சுப்ரமணி ஆகி யோர் தலைமை தாங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: