புதுதில்லி, ஜூன் 6-பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந் தியா நிறுவனத்தின் விமானிகள் கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப்போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர் களின் நலன்களை பற்றியோ, அரசுத்துறை நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பற்றியோ அக்கறை காட்டாத அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசு உள்ளது. ஊழியர் விரோதப்போக்கு நடவடிக்கையாக, விமானப்போக்குவரத்துத்துறைஅமைச்சர் அஜித் சிங் புதன்கிழமை அளித்த பேட்டி யில், பணிநீக்கம் செய்யப்பட்ட 101விமானி களுக்கு நிறுவனத்தில் இடம் இல்லை. புதிய விமானிகள் சேர்க்கை நடைபெறும் போது, அவர்கள் விண்ணப்பித்தால் ஏர் இந்தியாவில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள் என கூறினார்.மத்திய அரசின் இந்தக் கடுமையான போக்கு அனைத்துத்தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தலைநகர் தில்லியில், அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை விமானிகள் வேலை நிறுத் தம் முடிந்துவிட்டது. விமான நிறுவன வளர்ச்சிக்கான தர்மாதிகாரி அறிக்கையை வேலை நிறுத்தம் செய்யும் விமானிகள் ஏற்கவில்லையென்றால், அவர்கள் மீண்டும் வருவதற்கு, எந்த விஷயமும் இருப்பதாக கருதவில்லை என்றார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகள் வேலைக்கு புதிதாக விண்ணப்பித்துத் தான் சேரவேண்டும் என்றும் அவர் கூறினார்.ஏர் இந்தியா நிறுவன விமானிகள் வேலைநிறுத்தம் 30வது நாளை எட்டிய நிலையில், இந்திய விமானிகள் சங்க (ஐபிஜி) உறுப்பினர்கள் தில்லி மற்றும் மும்பையில் மௌனப்பேரணி நடத்தினர். இந்த நிலையில் அமைச்சர், இத்தகைய விமர்சனத்தை கூறியுள்ளார்.பணி நீக்கமான விமானிகளை மீண்டும் சேர்த்தல், ஐபிஜி சங்கத்திற்கு அங்கீகாரம், பதவி உயர்வு ஆகியவை குறித்து போராட் டத்தில் உள்ள விமானிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.தற்போது 90 விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் ஆகஸ்ட் மாதம் பணியில் இடம்பெறு வார்கள் என்றும் அஜித் சிங் கூறினார்.புதிய விமானங்களை இயக்குவதற்கு போதிய விமானிகள், என்ஜினியர்கள் உள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ள விமானிகள் பணிக்கு திரும்ப விரு ம்பவில்லை. அவர்கள் தர்மாதிகாரி அறிக் கையை நிராகரித்துவிட்டனர். ஏர் இந் தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் என முன்னர் இருந்த 2 நிறுவனங்களின் ஊழியர்கள் ஒருங் கிணைப்புக்கான பரிந்துரைகளை, அந்த அறிக்கை அளித்திருந்தது என்றும் அஜித் சிங் தெரிவித்தார். விமானிகள் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்பதே எங்களது நிலைபாடு. உயர்நீதி மன்றமும் அதனையே கூறியுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்பாக அவர்கள் நோட்டீஸ் தரவில்லை. முன் நிபந்தனை யின்றி அவர்கள் வந்தால் வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.கோலாலம்பூர், லண்டனுக்கு 2 புதிய விமானங்கள் இயக்குவது உள்பட ஏர் இந் தியாவின் சர்வதேச சேவைக்கான புதிய திட்டங்களையும்அஜித்சிங் தெரிவித்தார். போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங் கள் இந்த மாதத்தில் நிறுவன செயல்பாட் டில் இடம்பெறும் என்றும் அஜித் சிங் கூறினார்.
விமானிகள் புகார்
பணிநீக்கம் செய்யப்பட்ட விமானி களை மீண்டும் பணியில் சேர்க்க முடி யாது என்றும் புதிய விமானிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் அஜித் சிங் மிரட்டியுள்ளார்.நியாயமான ஊதியம் கேட்டு போராடி வரும் தங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கும் அமைச்சர், புதிதாக தேர்வு செய் யப்படும் விஞ்ஞானிகளுக்கு கூடுதலாக ஊதியம் தருவதாக கூறுவது ஏன் என்று போராடும் விமானிகள் கேள்வி எழுப் பினர். புதிதாக விமானிகளை நியமிக்கும் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் செயல் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் நெருக்கடியில் இருப்பதாக அவர் கூறுகிறார். அதே நேரத்தில் புதிதாக தேர்வு செய்யப்படும் விமானிகளுக்கு அதிக ஊதியம் தருவதாக ஆசை காட்டுவது ஏன் என்று இந்திய விமானிகள் சங்கத்தின் இணைச் செயலா ளர் கேப்டன் அனில்குமார் ராவ் கேள்வி எழுப்பினார்.மிரட்டும் போக்கை கைவிட்டு பேச்சு வார்த்தையின் மூலம் போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர மத்திய அரசு முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண் டார். பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களது சகாக்கள் 101 பேரை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அவர்கள் கூறினர்.கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மத்திய அமைச்சர் அஜித் சிங் எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: