சிம்லா, ஜூன் 6-ஐக்கிய முற்போக்கு கூட் டணி மற்றும் தேசிய ஜன நாயகக் கூட்டணி கட்சிக ளின் தோல்வியால் ஏற் பட்ட அரசியல் வெற்றிடத் தை நிரப்ப, தகுதி வாய்ந்த நம்பிக்கையான மூன்றாவது மாற்றை நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். மார்க் சிஸ்ட் கட்சி அந்த வெற்றி டத்தை பூர்த்தி செய்ய கடுமையாக முயற்சிக்கிறது என மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச் சூரி எம்.பி., சிம்லாவில் கூறினார்.சிம்லாவில் நடந்த பத்தி ரிகையாளர்கள் சந்திப்பில் யெச்சூரி கூறுகையில், சிம்லா, மாநகராட்சித் தேர் தலில் மார்க்சிஸ்ட் கட்சி மகத்தான வெற்றிபெற்றுள் ளது. இரு முக்கிய கட்சிகள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனதையும், அக்கட்சிகள் மீது மக்க ளுக்கு உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதையும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் நம்பிக்கை வைத்து கட்சிக்கு வெற்றி தந்துள்ளனர். அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பொதுமக்களின் பிரச்சனை களான ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தீவிரமாக குரல் எழுப்பும் என்றார்.
காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2வது ஐந் தாண்டு ஆட்சிக்காலம் நோக்கம் இல்லாமல், வழி காட்டுதல் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட் டினார்.ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் குறைந்த பட்ச பொதுசெயல்திட்டத் தை சிபிஎம் வலியுறுத்தியது டன் அரசை வழி நடத்தவும் செய்தது. ஆனால் இந்த முறை அக்கூட்டணி அர சை நிர்ப்பந்தப்படுத்த யாரும் இல்லை. அதனால் காங்கி ரஸ் அரசு தோல்வி அடைந் துள்ளது என்றும் அவர் கூறினார்.வங்கிகள்,எல்ஐசி ஓய் வூதிய நிதியில் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு என அரசு மேற்கொண்ட மசோ தாக்களுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் போராட்டத் தின் விளைவால் உலகப் பொருளாதார நெருக்கடி யின்போது நாடு காப்பாற் றப்பட்டது. பொதுத்துறை களை தனியார் மயமாக்கும் மசோதாக்கள் நிறைவேறி இருந்தால், நாடு சீரழிந்திருக் கும் என்றும் அவர் தெரி வித்தார்.இந்த மசோதாக்களை எதிர்த்ததால் எங்களை பிசாசாக பிரதமர் கருதினார் என்றும் அவர் வேதனையு டன் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகை யில், பாஜக மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி களின் கொள்கைகளில் வேறு பாடு இல்லை. இரண்டு கட்சி களும் தாராளமயக் கொள் கைகளை ஆதரிப்பவை என் றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.