விழுப்புரம், ஜூன் 6- விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நடு நிலைப்பள்ளி கட்டிடத்தை விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி திறந்து வைத்து மாணவர் சேர்க்கையினை தொடங்கிவைத்தார். இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பி. நீதிபூபதி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அமுதா வரவேற்றார். காணை ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கே.தமிழரசி, உதவி தொடக்க கல்வி அலு வலர் சி.கோபால், முன்னாள் ஓன்றியக்குழு தலைவர் ஆர்.துரை, கல்விக்குழு தலைவர் டி.பார்த்தசாரதி கலந்து கொண்டனர். மாணவர்களுக்கும், புதிதாக சேர்ந்த மாண வர்களுக்கும் சீருடை, நோட்டு, பேனா முதலியவற்றை வழங்கினார்.

Leave A Reply