“உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக…” என்ற தடபுடல் விளம் பரங்களோடு தொலைக்காட்சியில் அவ்வப் போது திரைப்படங்கள் ஒளிபரப்பாவதுண்டு. அதைப் போல, இந்தியக் காவல்துறைகளில் முதல் முறையாக தமிழ்நாட்டில் இணையத் தொடர்பு மூலமாகப் பயிற்சியளிப்பதற்கான திட்டம் செயல்படத் தொடங்கியிருப்பதாக ஒரு பத்திரிகைச் செய்தி கூறுகிறது. சட்டம்- ஒழுங்கு தொடர்பான விதிகள், காவல்துறை சட்டங்கள் ஆகியவை மட்டுமல்லாமல் மனித உரிமைகள், மக்களின் வாழ்க்கை நிலைகள், பண்பாடுகள் ஆகியவை தொடர்பான தக வல்களும் பாடங்களும் “இ-லேர்னிங்” எனப் படும் இந்தத் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு கற்பிக்கப்படுகின்றனவாம்.காவல்துறையினருக்கு மக்களின் வாழ்க்கை நிலைமைகள், அவர்களது உரி மைகள் உள்ளிட்ட புரிதல்கள் இருக்க வேண் டும் என்பதே மனித உரிமைகளுக்காக வாதாடு வோரின் விருப்பம். சிறைகளில் உள்ள கைதிகளில் 70 விழுக்காட்டினர், இன்னும் விசாரணைக் கைதிகளாகவே வைக்கப்பட்டி ருக்கிறார்கள், பலர் பின்னப்பட்ட போலி வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் என் பன போன்ற தகவல்கள் இந்தப் புரிதல்களின் தேவையை வலியுறுத்துகின்றன.
காவல்துறைக்குள் எந்த அளவுக்கு சாதி யம் புகுந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக் கிறது என்பதற்கு பரமக்குடி அண்மைக் காலத்து சாட்சியம். ஒடுக்கப்பட்ட சமூகங் களின் எளியமக்களை காவல்துறையினர் கிள்ளுக்கீரைகளாகவே நடத்துகிறார்கள் என்பதற்கு திருக்கோவிலூரில் 4 இருளர் சமூகப் பெண்களுக்கு நேர்ந்த நிலைமை அழிக்க முடியாத தடயமாகியிருக்கிறது. இப்படிப்பட்ட சாட்சியங்களும், தடயங்களும் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் ‘இ-லேர்னிங்’ மூலமாக காவல்துறையினரி டையே அந்த நேயமும் மதிப்பும் வேரூன்றி விட முடியுமா?கடந்த முறை ஜெயலலிதா முதலமைச்ச ராக இருந்தபோது இதே போல் காவல் துறையினருக்கு மனித உரிமைகள் தொடர் பான உணர்வூட்டல் பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டன. அந்த வகுப்புகளால் எந்த அள வுக்கு காவலர்கள் மனித உரிமைகளைப் புரிந்துகொண்டார்கள்?காவல்நிலையங்களில் விசாரணைக் காகக் கொண்டு செல்லப்படுகிறவர்கள் மரி யாதையோடு நடத்தப்படுகிறார்களா என்பது ஒருபுறமிருக்க, புகார்கொடுக்கச் செல்கிற வர்களுக்கே கூட என்ன அனுபவம்? அவர் கள் அரசியல் செல்வாக்கு உடையவர்களா கவோ, அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த நடுத் தரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களா கவோ, பணம் தாராளமாகப் புழங்குகிறவர்க ளாகவோ, ஆதிக்க சாதியினராகவோ இருந் தால் அவர்கள் அமர்வதற்கு நாற்காலி கிடைக்கும். ஏழைகளாக, ஒதுக்கப்பட்ட சமூ கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்துவிட் டால் நிற்க வேண்டும் அல்லது தரையையே இருக்கையாகக் கருதி உட்கார வேண்டும். ஏனிந்தப் பாகுபாடு?எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடிவந்த இருவர் எங்கள் பகுதியில் குடியிருந்தனர். ஓராண்டு கழித்து இவர்களது இருப்பிடத்தைக் கண்டு பிடித்த பெண்ணின் தந்தை, தனது மகளை அந்த இளைஞன் கடத்தி வந்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவலர் கள் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று இளம் இணையரை அழைத்துவந்தனர். தகவல றிந்து அந்த இளைஞனின் பெற்றோரும் வந் தார்கள். காதலர்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளில் இருக்கச்சொன்ன காவல்துறை அதிகாரி, பெண்ணின் பெற்றோரையும் உற வினர்களையும் அங்கிருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். பையனின் பெற்றோரை கை கட்டி நிற்கவிட்டார். சந்தேகப்பட்டு விசா ரித்தபோது பையனின் குடும்பம் தலித் சமூ கத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.உணர்வூட்டல் முகாம்களின் விளைவாக சில காவல்நிலையங்களின் வாசல்களில் பந் தல் போடப்பட்டு, காத்திருந்த மக்கள் உட் கார்வதற்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப் பட்டன என்பது உண்மையே.
ஆனால் அது சில அதிகாரிகளின் தனிப்பட்ட அக்கறை யால் நடந்ததேயன்றி, காவல்துறையின் ஒட்டு மொத்த சீர்திருத்தத்தால் நடந்ததாகக் கூற முடியுமா? ஏன் மற்ற காவல்நிலையங்களுக்கு அந்தப் பந்தல் பரவவில்லை? இப்போதும் சில அதிகாரிகளும் காவலர்களும் மக்களிடம் இணக்கமாக, “காவல்துறை உங்கள் நண் பன்” என்று சொல்வதற்குப் பொருத்தமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஏன் துறையின் மொத்த குண மாக மாறவில்லை?ஆக, மேற்படி உணர்வூட்டல் முகாம்கள், தொகையும் தேதியும் குறிப்பிடாமல் ஆசிரி யர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட “வவுச் சர்” முகாம்களாக முடிந்ததுதான் மிச்சம். அதே போல் இன்றைய “இ-லேர்னிங்” திட்டமும் மாறிவிடுமோ என்ற கவலைதான், காவல்துறையில் மெய்யாகவே சீர்திருத்தங் கள் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறவர் கள் எதிர்பார்ப்பது.அரசின் கொள்கையிலிருந்தே காவல் துறையின் அணுகுமுறை மாற்றம் நிகழும். இங்கோ, மனித உரிமை மீதான மோதலாக நடத்தப்படும் “என்கவுன்ட்டர்” கொலை களின்போது அதைக் கண்டிக்காத அரசாக அல்லவா இருக்கிறது? அதைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிற அரசாக அல்லவா இருக்கிறது? சென்னை வேளச்சேரியில் 5 பேர் இப்படி என்கவுன்ட்டரில்போட்டுத்தள்ளப் பட்டதைக் கொண்டாடிய, அனைத்துப் பகுதி களிலும் பிழைப்பு தேடி வந்து குடியிருக்கக் கூடிய பிற மாநிலத்தவர்கள் பற்றி வீட்டுச் சொந் தக்காரர்கள் தகவல் தரவேண்டும் என்று காவல்துறை ஆணையிட்டதைக் கண்டு கொள்ளாத அரசாக அல்லவா இருக்கிறது? பரமக்குடியாகட்டும், திருக்கோவிலூராகட்டும் சம்பந்தப்பட்ட காவலர்களை இடைநீக்கம் செய்ய முன்வராத அரசாக அல்லவா இருக் கிறது? சாதிய ஒடுக்குமுறைக் குற்றங்கள் தொடர்பாக வன்கொடுமை (தடுப்பு) சட்டத் தின்கீழ்தான் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என கட்டளையிடாத அரசாக அல்லவா இருக்கிறது?காவல்நிலைய ஆய்வுக்கு ஒரு மேலதி காரி வருகிறார் என்றால், அவரைக் கவனித் துக்கொள்ளும் செலவுக்கு அந்த வட்டாரத் தில் வசூல் வேட்டையாட வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இ-லேர்னிங் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடும்? நடைமேடையில் படுத்துறங்கும் ஒரு ஏழையின் முதுகில் பிரம்பால் அடிக்கிற காவ லருக்கு கணினி முன்பாக அமர்வதற்கோ, இணைய வழி மனித உரிமை பாடங்களைப் பயில் வதற்கோ அவகாசம் ஏது? அந்தக் காவலர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்ற உள வியல் காரணங்களை பல்வேறு சமூக ஆய் வாளர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, காவலர்கள் தங்களது மனக்குறைகளை வெளிப்படுத்துவ தற்கான, மன அழுத்தத்தை மாற்றுவதற்கான வடிகால் ஏற்பாடு தேவை என்பது. இன் னொரு முக்கிய ஆலோசனை, காவலர்கள் சங்கம் அமைத்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது.இதற்கெல்லாம் அடித்தளமாக தேவைப் படுவது அரசின் கொள்கை மாற்றமே. அந்த மாற்றம் “இ-லேர்னிங்” வழியாக வந்து விடாது. “பி-லேர்னிங்” (பாலிசி லேர்னிங்) மூலமாகவே வரும். தனக்குத் தானே அப்படி யொரு கொள்கைக் கற்றல் முகாம் நடத்திக் கொள்ள அரசு தயாரா?

Leave A Reply

%d bloggers like this: