தூத்துக்குடி, ஜூன் 6-தூத்துக்குடி மாநகராட் சியில் குடிநீர்க் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.தூத்துக்குடி மாநகரா ட்சி அவசரக் கூட்டம், கூட் டரங்கில் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடந் தது. கூட்டத்தில், ஆணை யர் மதுமதி, பொறியாளர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், மண்டலத் தலை வர்கள் ஏ.டிஅலெக்சாண் டர், கோகிலா ஜெயமுரு கன், வெள்ளப்பாண்டி, செல்வராஜ் மற்றும் கவுன் சிலர்கள்கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய தும், தூத்துக்குடி மாநகரா ட்சியுடன் இணைக்கப் பட்ட 5 ஊராட்சி பகுதிகளு க்கு கூட்டுக் குடிநீர் திட்டத் திலிருந்து மிகக் குறைந்த அளவு மேல்நிலைத் தொ ட்டிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வரு கிறது. மக்கள் தொகை அடிப்படையில் 4வது பைப் லைன் திட்டத்தை செ யல்படுத்த ரூ.282.44 கோடி திட்ட மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டத் தை மாநகராட்சி பொது நிதியிலிருந்து செயல்படுத்த முடியாததால் நிதி திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, வீட்டு உபயோ கத்திற்கு வைப்புத் தொகை யாக ரூ.10ஆயிரமாகவும், வீட்டு உபயோகம் அல்லாத வைகளுக்கு ரூ.20ஆயிரமும், தொழிற்சாலை உபயோகத் திற்கு ரூ.40ஆயிரமும் வைப் புத் தொகை வசூல் செய்ய வும், வீடுகளுக்கு குடிநீர் கட் டணமாக 150 ரூபாயும், வீட்டு உபயோகம் இல்லாத வைகளுக்கு ரூ.300, தொழிற் சாலைகளுக்கு ரூ.450ஆக வும் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் கோட்டுராஜா, எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மேயர், ஆணையரிடம் மனு கொடுத்தார்.ஆனால், 2020ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடு ப்பு படி 4வது பைப் லைன் அவசியம் என மேயர் சசி கலா புஷ்பா பதிலளித்தார். அப்போது, எதிர்ப்பு தெரி வித்து திமுக கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சுரேஷ் குமார், கலைச்செல்வி, பால குருசாமி, ஆனந்தராஜ், பால சுப்பிரமணியன், ஜெயசிங், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ராஜாமணி, கோட்டுராஜா ஆகிய 11பேரும் வெளிநட ப்புசெய்துகோஷமிட்டனர். உடனே மேயர், அனை த்து தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டதாகவும், இத் துடன் கூட்டம் நிறைவ டைந்ததாகவும் அறிவித் தார். கூட்டத்தில் தூத்துக் குடியில் உள்ள 8 பூங்காக் களை சீரமைக்க ரூ.1கோடி யே 50ஆயிரம் ஒதுக்கீடு உட் பட 5 தீர்மானங்கள் 2 நிமி டத்தில் நிறைவேற்றப்பட் டன.

Leave a Reply

You must be logged in to post a comment.