மனிதனுக்கு பலவித நோய்கள் வந்தாலும் அதனை குணப்படுத்த பல்வேறு விதமான மருந்து மாத்திரைகள் ஆராய்ச்சியாளர்களால்கண்டுபிடிக்கப்பட்டுவழங்கப்படுகிறது. அதன் வரிசையில் தற்பொழுது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு துத்தநாகம் ஒரு அற்புதமான நோய் எதிர்ப்பு மருந்து என தற்போதைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட THS Technology Institute, ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இன் இன்டியா மற்றும் பிரிட்டீஸ் மெடிக்கல் ஜோனல் தி லான்செட் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளதாவது: துத்தநாகம் ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய மலிவான ஒரு நோய் தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சையில் ஏற்றுக்கொண்டு குழந்தை இறப்பை கணிசமாக குறைக்கலாம்.
குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பாக்டீரியா கிருமிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்று ஆய்வுக்கு தலைமை வகித்த ஆராய்ச்சியாளர் சின்ஜினி பட்நாகர் கூறுகிறார். அதேபோல், அமெரிக்க பொது சுகாதார ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, கடுமையானபாக்டீரியாதொற்றுநோய்களால்குழந்தைகள் பெரிதும் பாதிக்கும் இந்த தருணத்தில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் துத்தநாகத்தின் (ணinஉ) இயல்புகள் குறித்து தீவிர ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். அதிகமாக 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற நோய்களை குணப்படுத்துவதில் அதிக பங்கு பெறும் என்று கூறுகிறார்.

Leave A Reply

%d bloggers like this: