திருச்சிராப்பள்ளி, ஜூன் 6-திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக, சென்னை தரமணியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செவ்வனே இயங்கி வருகிறது.மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல், படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவ – மாணவியர் இயக்குதல் பிரிவிலும், இக்கல்லூரியில் மூன்றாண்டு கால பட்டப்படிப்பிற்காக 2012 – 2013 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்காக வரவேற்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ – மாணவியர், இதற்கான விண்ணப்பப்படிவங்களை, 16.5.2012 நாளிட்ட ‘தினத்தந்தி’ மற்றும் ‘தி இந்து’ நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரங்களை பார்த்தும் தமிழக அரசின் றறற.வn.படிஎ.in என்ற இணைத்தள முகவரியில் 18.5.2012 – இல் படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை எம்.ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர்(பொ) ஆர்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.