2012-13ம் ஆண்டிற்கான வரவு – செலவு அறிக்கையில் மறைமுக வரியாக ரூ. 45,940 கோடிக்கான பளுவை சாமா னிய மக்கள் மீது மத்திய அரசு சுமத்தி யுள்ளது. ரூ. 25,000 கோடிக்கான மானி யங்களை வெட்டியுள்ளது. உர மானியத் தில் ரூ. 6,000 கோடி குறைத்துள்ளது. அதே நேரத்தில் பெரும் முதலாளி களுக்கும் பங்குச் சந்தையை ஊக்குவிக் கும் விதத்திலும் ஏராளமான சலுகை களை வாரி வழங்கியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் தவிர பாஜக, திராவிட கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நிறைவேற முழுமை யான ஒத்துழைப்பு நல்கி, மத்திய அர சின் பாராட்டை பெற்றுள்ளன.இந்தப் பின்னணியில் தமிழகத்திலும் தன் பங்கிற்கு மத்திய அரசின் பாணியில், பால் விலை உயர்வு, பஸ் – மின் கட்டண உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றி விட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா 2012-13ம் நிதியாண்டில் நலத் திட்டங் களை நிறைவேற்ற 3-ந் தேதி தில்லி சென்று மத்திய திட்டக்குழுவை சந்தித்து விட்டு அதிருப்தியுடன் சென்னை திரும்பியுள்ளார்.
திட்டக் கமிஷன் அலு வலகமான யோஜனா பவனில் அவரை சந்தித்து பேட்டி காண இருந்த ஏராளமான பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க வில்லை.முதல்வரை வழியனுப்ப வந்த திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, தமிழக அரசிற்கு 2012-13ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 28 ஆயிரம் கோடி மத்திய திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் மின்சாரக் கட்டணங் களை தமிழக அரசு நீண்ட காலத்திற்கு பிறகு உயர்த்தியுள்ளதை வரவேற்றும், பாராட்டியும் உள்ளார். அதாவது மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டால் அதை மத்திய திட்டக்குழு வரவேற்று பாராட்டும். மத்திய திட்டக்குழு என்பது அதிகாரம் எதுவும் இல்லாத ஒரு ஆலோசனை கூறும் அமைப்புதான். ஆனால் மாநிலங் கள் தங்களது தேவைக்காக மத்திய திட் டக்குழுவிடம் கைகட்டி நிற்கும் நிலை ஏற் படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் ஏதோ யாசகம் தருவதுபோல நடந்துகொள் கிறார்கள். இது கூட்டாட்சி அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இன்னும் சொல்லப் போனால் உலகவங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் திட்டங்களை மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை கண் காணிக்கும் அமைப்பாக திட்டக்குழு மாற் றப்பட்டதோடு, அதற்கேற்பவே அவர் களது தயாள குணம் வெளிப்படும் என்றும் மறைமுகமாக கூட அல்ல வெளிப்படை யாகவே காட்டப்படுகிறது. தமிழக அரசு எவ்வளவு ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதோ அந்த தொகையை திட்டக் கமிஷன் ஒதுக்கிவிட்டது. இது சென்ற ஆண்டை விட 19 சதவிகிதம் அதிகம். ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன வென்றால், ரூ. 3 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குகிறது. மீதமுள்ள ரூ. 25 ஆயிரம் கோடி தமிழ்நாட் டின் சொந்த நிதியாகும்.
மத்திய திட்டக் குழு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிதி ஒதுக்கு கிறது. இதை மாநில அரசுகளும் மௌன மாக ஏற்றுக் கொள்கின்றன. இதுதான் கடந்த ஆண் டும் அதற்கு முந்தைய ஆண்டும் செயல் படுத்தப்பட்ட நடைமுறையாகும். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்றவர்கள் மாநில சுயாட்சி குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சியில் இடம்பெறு வதிலும் அமைச்சராவதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றனர். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப் போம் என்றவர்கள் உரிமையைப் பற்றி கவலைப்படாமல் எந்தநிலையிலும் உறவை காப்பாற்றிக் கொள்வதிலேயே அக்கறையாக உள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு எந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது, எந்த காரணி யின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்பது குறித்து ஜெயலலிதா அப்போது கவலைப்படவில்லை. தற்போது நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அதி முக அரசும் பின்பற்றி, அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள் ளது. மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப் பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களு டன் பல்வேறு புரிந்துணர்வு உடன்பாடு கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. இதை மனதில் கொண்டு திட்டக்குழு நிதி ஒதுக்க வேண்டும் என்பதே அவரது எண் ணமாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்று வதற்காக சிறப்பு நிதியுதவி, கூடுதல் நிதி உதவி தேவை என்று கேட்டதற்கு, திட்டக் கமிஷன் பே, பே, என்று கூறிவிட்டதாம். ஆகவே தான் அவர் கோபமாக சென்னை திரும்பியுள்ளார். கேட்ட நிதியை ஒதுக்க வில்லை என இதர மாநில முதல்வர் களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தமிழகம் மற்றும் நாட்டில் உள்ள இதர மாநிலங்களின் தேவைகளை புரிந்து கொண்டுள்ளது. 13வது நிதிக் கமிஷ னுக்கு தன்னுடைய கருத்துக்களை எழுத்து மூலமாக (7.7.2008) மார்க்சிஸ்ட் கட்சி அளித்துள்ளது.1991க்குப்பின் நவீன தாராளமய பொரு ளாதார கொள்கைகளை அமல்படுத்த ஏதுவாக மத்திய அரசு இந்திய கூட்டாட்சி அமைப்பு முறையில் மாற்றம் செய்கிறது. ராஜமன்னார் கமிட்டி, சர்க்காரியா கமி ஷன் பரிந்துரைகளை உதாசீனம் செய்து வருகிறது. காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தினாலும் மாநிலங்களின் உரிமை களைப் பறிப்பதில் வேறுபாடின்றி நடந்து வருகின்றன.
நிர்வாகம், சட்டம் இயற்று தல், நிதி உட்பட பல செயல்பாடுகளை தன்னகத்தே குவித்துக் கொண்டு, அதை வலுப்படுத்தும் பாதையில் வேகமாக நகர்ந்து வருகிறது என்பதை தெளிவாக மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது.இதன் தொடர்ச்சியாகத்தான், மத்திய அரசு உருவாக்கும் நிதிக்கமிஷனை தன் னிச்சையாக உருவாக்காமல் மாநில அர சின் சம்மதத்தைப் பெற்று உருவாக்க வேண்டும். இது மத்திய, மாநில அரசு களின் கூட்டுக் கூட்டத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.இந்திய அரசியல் சட்டம் மாநிலங் களுக்கு அதிக பொறுப்பை வழங்கி யுள்ளது. அதை நிறைவேற்ற தக்க முறை யில் அதிகார பரவல், நிதியாதாரம் போன்ற வை வழங்கப்பட வேண்டும். இதை நிறைவேற்றும் முறையில் மத்திய அரசு வசூலிக்கும் வரித் தொகையில் 50 விழுக் காடு மாநிலங்களுக்கு தர வேண்டும். அதை நிறைவேற்ற முதலில் 33.33 விழுக்காடு என்கிற விதத்தில் துவங்க வேண்டும்.மேலும் தற்போது மத்திய அரசு, மாநில அரசுகள் சந்தையில் வாங்கும் கடன் களை 15.5 விழுக்காடாக குறைத்துள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியக் குழுக் களின் பரிந்துரைகளை அமலாக்கும் போது 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்க வேண்டும்.மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மாநில அதிகார வரம்புக்குட்பட்ட பிரிவில் மத்திய அரசு, உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு களுடன் பேசி எந்த முடிவுகளையும் திணிக்கக் கூடாது.இதுபோன்ற திட்டவட்டமான பல கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிடம் வழங்கி விவாதித் துள்ளது. இதன் நகல் மற்ற கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை இப் போதாவது தமிழக அரசு பரிசீலிக்குமா? என்பது நமது கேள்வி. இதர மாநில அரசுகளும் இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, மத்திய அரசுடன் பேசி ஒரு சரியான ஏற்பாட்டை செய்ய முன் வரவேண்டும். மத்திய அரசி டம் கையேந்தி நிற்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க இது உதவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.